ராஜவம்சம் விமர்சனம்

0
150

ராஜவம்சம் விமர்சனம்

செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா மற்றும் டாக்டர்.சஞ்சய் குமார் தயாரிப்பில் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ராஜவம்சம்.
சசிகுமார், நிக்கிகல்ராணி, ராதாரவி, விஜயகுமார், தம்பி ராமையா, நிரோஷா யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ், மனோபாலா, கும்கி அஸ்வின்,ஆடம்ஸ், சரவணா சக்திமணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், நமோ நாராயணன்,சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, சந்தான லட்சுமி,சசிகலா,யமுனா,மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவன்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-சித்தார்த்,இசை-சாம்.சி.எஸ், கலை இயக்கம்- சுரேஷ் களரி, எடிட்டிங்-சபு ஜோசப்,நடனம்-ராஜுசுந்தரம், சாண்டி,தஸ்தா, சண்டை-திலீப் சுப்ராயன், நிர்வாக தயாரிப்பு-என்.சிவகுமார், தயாரிப்பு மேற்பார்வை-பாண்டியன் பரமசிவம், பிஆர்ஒ- ரியாஸ்.

சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் சசிகுமார் கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியில் பிறந்தவர். இவருக்கு ஐடி கம்பெனியில் 5 ஆயிரம் கோடியில் மூன்று மாதத்தில் முடித்து தரும் மிகப் பெரிய கனவு ப்ராஜக்ட் வழங்கப்பட மிகுந்த கவனத்துடன் செயல்பட துடிக்கிறார். இன்னொரு புறம் சசிகுமாரின் குடும்பத்தினர் அவர் காதலி  போல் நடிப்பதற்காக அழைத்து வரும் நிக்கி கல்ராணியையே திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறார்கள். திருமணமா, ப்ராஜக்டா என்ற நிலைக்கு சசிகுமார் தள்ளப்படுகிறார். எதை தேர்ந்தெடுத்தார்? நிக்கி கல்ராணியின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து குறிப்பாக சண்டைக்காட்சிகளில், குடும்பம், காதல், நட்பு என அசத்தி இருக்கிறார். நிக்கி கல்ராணி, அழகாக வந்து  ஸ்கோர் செய்கிறார். யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது. மற்ற பெரும் திரளான கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதைக்கு உள்ளே பெரிதும் உதவி வலம் வருகிறார்கள்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.

குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை பாசம், உறவுகள், சென்டிமெண்ட் காட்சிகளோடு சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு.

மொத்தத்தில் ராஜவம்சம் பாசப்பிணைப்பில் அம்சமாக இருக்கிறது.