மோகன்லால் & மீனா மீண்டும் இணையும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு தொடங்கியது

0
234

மோகன்லால் & மீனா மீண்டும் இணையும் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தொடங்கியது

மோகன்லால் மீனா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதோடு தமிழில் கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் ரீமேக் ஆனது என்றும் இந்த ரீமேக் படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று முதல் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

மோகன்லால் & மீனா மீண்டும் இணைய உள்ள இந்த படத்தை அதே ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார் என்றும் படக்குழுவினர் அனைவரும் கடந்த 15 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அவர்களுக்கு நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டதால் இன்று படப்பிடிப்பு தொடங்கியது.