மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் விமர்சனம்

0
170

மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் விமர்சனம்

ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆன்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்துள்ள பிரம்மாண்ட படம் மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம்.

இதில் மோகன்லால், பிரபு, அர்ஜுன், நெடுமுடி வேணு, சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், சுகாசினி, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-எஸ்.திருநாவுக்கரசு, எடிட்டர்-ஐயப்பன் நாயர், திரைக்கதை-பிரியதர்ஷன்,அனி ஐ.வி.சசி, வசனம்-ஆர்.பி.பாலா, இசை-ரோனி ரபேல், பின்னணி இசை-அன்கித் சூரி, எல்எவன்ஸ் லோடர், ராகுல் ராஜ், பாடல்கள்- ஆர்.பி.பாலா, சாம்ஜி, சண்டை-பி.தியாகராஜன், கழூநேடா, விஷ_வல் மேற்பார்வை- சித்தார்த் பிரியதர்ஷன், மக்கள் தொடர்பு- ரியாஸ்.

16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் நடக்கும் கதையில் திருமணத்திற்காகச் சென்ற குஞ்சாலி குடும்பத்திற்கு நிகழ்ந்த துயர சம்பவம் அவரை ஒரு வலிமையான போராளியாக உருவாக்குகிறது. குஞ்சாலி மரைக்காயர் போர்ச்சுகீசியர்களுக்கும் சாமுத்ரி ராஜ்ஜியத்திற்கும், உள்@ர் ராஜாக்களுக்கும் சிம்ம சொப்பனமாக உருவாகிறார். அதன் பின் போர்ச்சுகீசியர்களை எதிர்க்க சாமுத்ரி ராஜா ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக பேச்சு வார்த்தை நடத்தி குஞ்சாலியை நியமிக்கிறார்.அதன் பின் நடக்கும் கடற் சண்டையில் போர்ச்சுகீசியர்களை தரைப்படை தளபதி அர்ஜுனுடன் சேர்ந்து வெற்றி வாகை சூட, குஞ்சாலியின் புகழ் உயர்கிறது. அதே சமயம் குஞ்சாலியின் வலது கரமாக விளங்கும் சீன வீரரை சாமுத்ரி அரண்மனையில் அமைச்சர் முகேஷின் மகள் கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறார். இவர்கள் திருமணம் செய்து கொண்டு குஞ்சாலியிடம் தஞ்சம் அடைகின்றனர். ஏற்கனவே தரைப்படை தளபதி அர்ஜுனின் சகோதரர்  அசோக் செல்வன் ஒருதலையாக கீர்த்தி சுரேஷை காதலிப்பதால் அவரை திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்த நிலையில் திருமணம் தடைபட்ட நிலையில் சாமுத்ரி ராஜா கோபமடைகிறார்.  குஞ்சாலியிடம் நியாயம் கேட்க செல்லும் தரைப்படை தளபதி அர்ஜுன் கொல்லப்படுகிறார்.இதனால் சாமுத்ரி ராஜ்ஜியத்திற்கும், குஞ்சாலிக்கும் பிரச்சினை உருவெடுக்க போர்ச்சுகீசியர்கள் சதி செய்து சில அமைச்சர்களை தன்வசப்படுத்தி குஞ்சாலி மேல் போர் தொடுக்க புறப்படுகின்றனர். இந்த போரில் யார் வென்றார்கள்? குஞ்சாலி என்ன ஆனார்? என்பதே முடிவு.

குஞ்ஞாலி மரைக்காயராக மோகன்லால். படம் முழுவதும் கதைக்களத்துக்கு ஒற்றை ஆளாக தாங்கிப் பிடித்து, பிரமிப்பான அமைதியான நடிப்பில் வேற யாரையும் நினைத்துப் பார்க்க முடியாதபடி அசத்திவிடுகிறார்.

இளவயது குஞ்சாலி மரைக்காயராக வரும் மோகன்லாலின் மகன் பிரணவ் ஆரம்பத்தில் வந்தாலும் அவருக்கு நடக்கும் அ;சம்பாவிதத்தால் மோகன்லால் போராளியாக மாறுவதற்கு காரணகர்த்தாவாக விளங்குகிறார்.

தங்கமாக பிரபு, நல்ல குணம் கொண்ட தரைப்படை தளபதியாக அர்ஜூன், சாமுத்ரி ராஜாவாக நெடுமுடி வேணு, சுனில் ஷெட்டி, வில்லனாக அசோக் செல்வன், அம்மாவாக சுகாசினி, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஏகப்பட்ட பல முன்னனி நடிகர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அனைவருக்கும் முக்கிய காட்சிகளை பகிர்ந்து கொடுப்பதில் சிக்கல் இருந்ததை உணர முடிகிறது.

சாபு சிரிலின் கலை வேலைப்பாடுகள் மற்றும் பெரிய மெனக்கெடலுக்கு பாராட்டுகள். யுத்த காட்சிகளை பெரிய திரையில் பிரம்மாண்டத்தை நிச்சயம் ரசிக்கலாம்.திருவின் ஒளிப்பதிவு இக்கதைக்கு சரியான தேர்வு மட்டுமல்ல படம் பார்ப்போரை பிரமிக்க வைத்துவிடுகிறார்.

ரோனி ரபேலுடன் சேர்ந்து அன்கித் சூரி, எல்எவன்ஸ் லோடர், ராகுல் ராஜ் ஆகியோரின் பின்னணி இசை அசத்தல் ரகம்.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து வியந்த போர்க்கள காட்சிகளை கண்முன்னே நிறுத்தியதில் காட்சிக்குக் காட்சி கிராபிக்ஸ் குழுவினரின் உழைப்பு வியக்கவைக்கிறது. சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராபிக்ஸ் என மூன்று பிரிவுகளில் இந்த சினிமா தேசியவிருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படை எல்லையில் முதல் கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவர் குஞ்ஞாலி என்றும் கூறப்படுகிறது. குஞ்ஞாலி நண்பர்களை அரவணைத்து, எதிரிகளை பந்தாடி, துரோகிகளிடம் வீழ்ந்தாலும் கம்பீரமாக சாவை சந்திக்கும் கடற்படை வீரர் என்ற கதைக்களத்தில் தொழிநுட்பம் மற்றும் பிரம்மாண்டத்தில் செலுத்திய உழைப்பை கொஞ்சம் திரைக்கதை அமைப்பிலும் செலுத்தி இருந்தால் இன்னுமே சுவாரஸ்யமாக மரைக்காயர் அசத்தலுடன் வந்திருப்பார். வரலாற்று பின்னணியை கொண்ட கதையில் கடின உழைப்பைக் கொட்டியிருக்கும் மரைக்காயர் படக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

மொத்தத்தில் மரைக்காயர்- அரபிக்கடலின் சிங்கம் பிரம்மாண்டத்திலும், தொழில்நுட்பத்திலும் அசத்தும் சிம்மசொப்பனம்.