மட்டி விமர்சனம்: ஆக்ஷன் அனுபவத்தை பெற திரையரங்கில் அனைவரையும் வரவழைத்து வசூலில் வெற்றி வாகை சூடும்

0
230

மட்டி விமர்சனம்: ஆக்ஷன் அனுபவத்தை பெற திரையரங்கில் அனைவரையும் வரவழைத்து வசூலில் வெற்றி வாகை சூடும்

பிகே 7 கிரியேஷன்ஸ் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் வந்துள்ள மட்டி படத்தை இயக்கியுள்ளார் பிரகபல்.

இதில் நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா,அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-கே. ஜி. ரதீஷ், இசை-ரவி பஸ்ரூர், படத்தொகுப்பு-ஷான் லோகேஷ்,வசனம் -ஆர். பி. பாலா, பிஆர்ஒ-சக்தி சரவணன்.
அண்ணன் தம்பிகளான யுவனும் ரிதனும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். யுவன் கேரளா மலைப்பகுதிகளில் ஜீப் ஒட்டி கடினமாக வேலை செய்கிறார். ரிதன் கிருஷ்ணா  கல்லூரியில் படிக்கும் போது அமித் சிவதாஸ் நாயரை மட்டி ரேசில் தோற்கடிக்கிறார்.இதனால் கோபமடையும் அமித் எப்படியாவது ரிதனை மட்டி ரேசில் தோற்கடிப்பேன் என்று சபதம் போடுகிறார். இதனால் ரிதனுக்கு பல விதங்களில் பிரச்சினை கொடுக்கிறார் அமித். அண்ணன் யுவன் தம்பி ரிதனுடன் ஒன்று சேர்ந்து அமித்துக்கு எதிராக மட்டி ரேசில் கலந்து கொள்கிறார். இந்த பந்தயத்தில் யார் வென்றார்கள்? தோற்றார்கள்? என்பதே படத்தின் விறுவிறுப்பான கதையின் முடிவு.

யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா இருவரும் போட்டி போட்டு கடும் உழைப்பை கொடுத்து நடித்துள்ளார்கள். சாகசங்கள் நிறைந்த ஜீப் பயணத்தில் மரண பயம் கொடுக்கும் சேசிங் காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் அபரிதமான பங்களிப்பை கொடுத்து மிரள வைத்துள்ளனர்.

வில்லனாக அமித் சிவதாஸ்; நாயர் மிரட்டலான, கம்பீரமான துரத்தல் காட்சிகளில் மிரட்டி விடுகிறார். நாயகியாக அனுஷா சுரேஷ் மற்றும் பலர் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

கே.ஜி.ரதீஷ் ஒவ்வொரு காட்சியையும் பல வருடங்களாக திட்டமிட்டு எடுத்து பல போராட்டங்களையும், தடங்கல்களையும் கடந்து ஒளிப்பதிவு செய்து, ஹாலிவுட் தரத்தில் த்ரில்லான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க என்ன மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது திரையில் பார்ப்பவர்களுக்கே புரியும். வெல்டன்.
கே.ஜி.எஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தடதடக்கும் இசையும், பந்தயத்தில் பின்னணி இசையும் மிரட்டாக கொடுத்து அசத்திவிடுகிறார்.

தமிழ் , மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்குத் தமிழில் ஆர். பி. பாலாவின் வசனம் படத்திற்கு பலம்.

ஷான் லோகேஷ் படத்தொகுப்பு கச்சிதம்.

ஐந்து வருட உழைப்பு, ஆறு மொழிகளில் வெளியீடு, இரண்டு வருட ஜீப் பந்தய படப்பிடிப்பு, இந்தியாவின் முதன் முதல் கரடுமுரடான மண் சாலை பந்தயம், உண்மையான திகிலான அனுபவம் கொடுத்த மலைக்காடுகளின் நடுவே எடுக்கப்பட்ட காட்சிகள், ஹாலிவுட் படங்களைப் போல் பிரம்மாண்ட சேசிங் காட்சிகள், குடும்ப சென்டிமெண்ட், பகை, பழி வாங்குதல், ஆக்ஷன், திகில், த்ரில் நிறைந்த திரைக்கதை என்று பார்த்து பார்த்து படத்தை செதுக்கி ஒரு அழகான திரைச்சிலையாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரகபல். அவரின் கனவுப் படம் அனைவருக்குமே ஒரு கவர்ந்திழுக்கும் படமாக அமைந்து பெரும் வெற்றி வாகை சூடும்.

மொத்தத்தில் பிகே 7 கிரியேஷன்ஸ் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸின் மட்டி வித்தியாசமான கதைக்களத்தில் மிரட்டி மிரள வைக்கும் துரத்தல் பந்தய பயண ஆக்ஷன் அனுபவத்தை பெற திரையரங்கில் அனைவரையும் வரவழைத்து வசூலில் வெற்றி வாகை சூடும்.