புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது! இயக்குநர் பாலாஜி மோகன்

0
120

புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது! இயக்குநர் பாலாஜி மோகன்

அமேசான் ஒரிஜினல் சீரிஸ், புத்தம் புது காலை விடியாதா.. முதல் பாகத்தைவிட எப்படி மாறுப்பட்டு நிற்கிறது என்பது குறித்து இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.
அமேசான் ஒரினிஜினல்ஸ் அண்மையில் 5 பாகங்கள் கொண்ட அந்தாலஜியை வெளியிட்டது. இந்த அந்தாலஜி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
காதல், நம்பிக்கை, புதிய துவக்கங்கள் என வாழ்க்கையின் உணர்வுகளை தனக்கே உரித்தான பாணியில் பாலாஜி மோகன் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நிச்சயமாக வித்தியமாக இருக்கிறது என்றே ரசிகர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பாலாஜி மோகன், புத்தம் புது காலை விடியாதா இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார். இந்த அந்தாலஜியில் முகக்கவச முத்தம் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். வித்தியாசம் என்னவென்று சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு கதையிலிருந்து எழும் வித்தியாசமான கருத்துகள் தான். எப்போது அந்தாலஜி உருவாக்கப்பட்டாலும் அதில் ஒவ்வொரு இயக்குநர் தனித்துவம் காட்டவே விரும்புவார்கள். அந்த வகையில் இந்த அந்தாலஜியில் ஐந்து வித்தியாசமான கதைகள் இடம்பெற்றுள்ளன. 5 பேரும் தனித்தனியாக தம் தம் பாதையில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். சமீப நாட்களில் வெளியான அந்தாலஜியில் சிறந்தது எனப் பெயர் பெற்றுள்ளது. அந்தாலஜிக்கு ஒரு புதிய வரையறையை வகுத்துள்ளது. அதனால் தான் புத்தம் புது காலை விடியாதா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் அரும்பிய காதல், துளிர்த்த நம்பிக்கை, வெளியான மனிதம், மீண்டெழுதல் எனப் பல்வேறு உணர்வுகளையும் அழகாகக் கடத்துகிறது.
இந்த அந்தாலஜி ஜனவரி 14 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியானது.