படைப்பாளன் விமர்சனம்: படைப்பாளன் இயக்குனர் கனவை நிராசையாக்கியவர்களை சூறையாடும் அஞ்சா நெஞ்சன் |மதிப்பீடு: 2.5/5

0
343

படைப்பாளன் விமர்சனம்: படைப்பாளன் இயக்குனர் கனவை நிராசையாக்கியவர்களை சூறையாடும் அஞ்சா நெஞ்சன் |மதிப்பீடு: 2.5/5

தியான் பிக்சர்ஸ் சார்பில் நட்சத்திரம் செபஸ்டியன் தயாரிப்பில் படைப்பாளன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தியான்பிரபு.
இதில் தியான் பிரபு, வேல்முருகன், வளவன், அஸ்மிதா, நிலோபர், மனோபாலா, அருவி பாலா, காக்காமுட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்கி, சிறப்பு தோற்றத்தில் ஜாக்குவார் தங்கம், டைரக்டர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-வேல்முருகன், இசை-பால முரளி, எடிட்டர்-எஸ்.பி.அஹமத், பாடல்கள்-சினேகன், கு.கார்த்திக், பாடியவர்கள்-வேல்முருகன், ஸ்வாகதா.

இயக்குனர் கனவில் இருக்கும் தியான் பிரபு பல படம் தயாரிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கதைகளை சொல்லி வாய்ப்பு தேடுகிறார். இதில் வேல்முருகனின் தயாரிப்பு கம்பெனி இவரின் கதையை திருடி ஒரு பெரிய இயக்குனரிடம் கொடுத்து பெரும் பொருட்செலவில் ரூ100 கோடியில் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடுகிறார்.இதைக் கேள்விப்பட்டு தியான் பிரபு தயாரிப்பு கம்பெனியிடம் சென்று முறையிட்டு தன் கதைக்கான அங்கீகாரத்தை கேட்கிறார். அதன் பின் தயாரிப்பாளரும், பெரிய இயக்குனரும் சேர்ந்து தியான் பிரபுவை அடியாட்களை வைத்து அடித்து துன்புறுத்துகின்றனர். இறுதியில் தியான் பிரபு என்ன ஆனார்? கதையை திருடியவர்களை என்ன செய்தார்? இவருக்கும் இவர் சொல்லும் பேய் கதைக்கும் என்ன சம்பந்தம்? எதனால் கொலைகள் நடக்கிறது? காரணம் என்ன? என்பதே கதையின் முடிவு.

இதில் தியான் பிரபு பல போராட்டங்களை சந்திக்கும் உதவி இயக்குனராக, அவமானப்;படுத்தபட்டு கதைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் அல்லல்படுவதும், பசியும் பட்டினியுமாக அவதிப்படுவதும், தயாரிப்பாளரிடம் சென்று பேய் கதையை சொல்லி பயமுறுத்துவதும், பேய் பங்களாவில் மாட்டிக்கொண்டு தப்பிக்க வழி தேடுவது, அதன் பின் ஏமாற்றியவர்களை பழி வாங்குவது என்று பயமுறுத்தல் நடிப்பில் சரிசம பங்களிப்பை கொடுத்து நடித்துள்ளார்.

இவருடன் வேல்முருகன்,  வளவன்,  அஸ்மிதா, நிலோபர், மனோபாலா, அருவி பாலா, காக்காமுட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்கி, சிறப்பு தோற்றத்தில் விவாத மேடை பேச்சாளர்களாக ஜாக்குவார் தங்கம், டைரக்டர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி ஆகியோர் படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கதாபாத்திரங்களாக இணைந்து மெருகேற்றியுள்ளனர்.

ல்முருகனின் காட்சிக்கோணங்கள் த்ரில்லர் கதைக்கு கேற்ற அச்சுறுத்தலுடன், சொகுசு பங்களாங்களின் வழிதடங்கள், மலைப்பிரதேசத்தில் உள்ள பேய் பங்களா, ஆமானுஷ்ய நடமாட்டம், கல்லறை, மனித சோம்பிக்கள், நீச்சல் குளத்தில் நடக்கும் சண்டைகள் என்று அசத்தலுடன் ஒளிப்பதிவில் கொடுத்துள்ளார்.

சினேகன்,கு.கார்த்திக் பாடல்களுக்கேற்ற இசையும், பின்னணி மிரட்டல் இசையும் படத்திற்கு பலம்.

எடிட்டர்-எஸ்.பி.அஹமத் இன்னும் கிரிஸ்ப்பாக கொடுத்திருக்கலாம்.

ஒலிவ் ஐலேண்டில் இருக்கும் ரிசார்ட்களில் கண்காணிப்பில் இருக்கும் இரு போலீஸ் அதிகாரிகள் அங்கே ஒரு காரில் கொடூரமான கொலையுண்டு இருக்கும் நபரை கண்டுபிடிக்கின்றனர். சினிமாவில் கார்ப்பரேட் கம்பெனிகளின் கதைத்திருட்டை பற்றிய தொலைக்காட்சி மேடையில் நாலு பேர் காரசாரமாக விவாதித்து சண்டையிடுகின்றனர். உதவி இயக்குனர் தன் கதைகளுக்கேற்ற தயாரிப்பு கம்பெனிகளை தேடி பல இடங்களில் முயற்சி செய்து கொண்டு துவண்டு போகிறார். ஒரு தயாரிப்பாளரை அணுகி பேய் கதையை சொல்லி முடித்து அட்வான்ஸ் வாங்கும் நேரத்தில் இயக்குனர் காணாமல் போகிறார். இத்தகைய துண்டு துண்டான காட்சிகள் முதலிலேயே காட்டப்படுவதால் இதையெல்லாம் ஒருங்கிணைத்து முழு கதையாக வடிவம் கொடுத்து எதிர்பார்ப்பை முடிந்த வரை பூர்த்தி செய்துள்ளார் இயக்குனர் தியான் பிரபு. தன் கதையை பறி கொடுத்த உதவி இயக்குனரின் வலிகளையும், போராட்டங்களையும், மனஉளைச்சல்களையும் சமீபத்தில் கேள்விப்பட்ட சம்பவங்களை நினைவுக்கு வரும் வகையில் விவாத மேடையின் பின்புறம் காட்டப்படும் படங்களை வைத்தே ஊகிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் தியான் பிரபு. இதில் கொஞ்சம் த்ரில்லர் ஃபார்மூலாவை கையாண்டு கிருத்துவ பெண் மத போதகர் எரித்து கொல்லப்படுவதும், அவரே அந்த பங்களாவில் பேயாக உலா வந்து அனைவரையும் கொல்வதாக கதைக்குள் கிளைக்கதையாக இடைச்சறுகலாக சொல்லி சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். சில இடங்களில் துண்டு துண்டாக காட்சிகள் முழுமையடையாமல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் கதைத்திருட்டை பற்றி தைரியமாக சொல்ல முயற்சி மேற்கொண்டதற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் தியான் பிக்சர்ஸ் சார்பில் நட்சத்திரம் செபஸ்டியன் தயாரிப்பில் படைப்பாளன் இயக்குனர் கனவை நிராசையாக்கியவர்களை சூறையாடும் அஞ்சா நெஞ்சன்.