தி நியூயார்க் டைம்ஸ் பத்திரகையின் சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படப் பட்டியலில் ‘கர்ணன்’

0
107

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரகையின் சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படப் பட்டியலில் ‘கர்ணன்’

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஓடிடியில் பார்க்க சிறந்த 5 சர்வதேச படங்களின் பட்டியலில் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ இடம் பிடித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வசூல் சாதனையையும் வரவேற்பையும் குவித்தது. கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’கர்ணன்’ படத்தைப் பார்த்துவிட்டு தமிழக அரசியல்வாதிகளே பாராட்டினார்கள். தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து அமேசான் பிரைமில் ’கர்ணன்’ வெளியானது.

கொரோனா சூழலில் தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் பார்த்து காலதாமதம் ஆனாலும் பாராட்டத் தவறவில்லை. அந்தளவிற்கு, ‘கர்ணன்’ கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் புகழ்மிக்க தி நியூயார்க் டைம்ஸ் ஓடிடியில் பார்க்க சிறந்த 5 சர்வதேசப் படங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில், கர்ணன் 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. ‘The Father Who Moves Mountains’, ‘Koshien: Japan’s Field of Dreams’,‘I Never Climbed the Provincia’,‘The Cloud in Her Room’ஆகியவை மற்ற நான்கு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.