சியான்கள் விமர்சனம்

0
265

சியான்கள் விமர்சனம்

கே.எல். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள சியான்கள் படத்தை வைகறை பாலன் இயக்கியுள்ளார்.
கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – முத்தமிழ், ஒளிப்பதிவு-பாபுகுமார், எடிட்டிங்-மப்பு ஜோதி பிரகாஷ், கலை-ரவீஸ், பாடல்கள்-முத்தமிழ், உடை-கதிரவன், ஒப்பனை-வெங்கடேஷ்வர ராவ், நடனம்-அப்சர், சண்டை-பிசி, தயாரிப்பு நிர்வாகி-பேச்சிமுத்து, இணை தயாரிப்பாளர்-லில்லி கரிகாலன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

தேனி அருகே பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த சியான்களான அறுபது வயதை தாண்டிய நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த இவர்கள் 7 பேரும் உடலளவில் முதியவர்கள் என்றாலும் மனதளவில் இளமையானவர்களாக வலம் வருகின்றனர். இணைபிரியாத நண்பர்களான இவர்களில் நாராயணசாமி மற்றும் துரைசுந்தரம் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக இறந்து விட மற்ற ஐந்து பேரும் இறப்பதற்குள் அவரவர் ஆசையை நிறைவேற்றிட வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இவர்கள் ஆசை நிறைவேறியதா? இதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றதா? முதியவர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒளி பிறந்ததா? என்பதே மீதிக்கதை.

டாக்டராக கரிகாலன், காதலியாக ரிஷா ஹரிதாஸ், ஏழு முதியவர்களாக நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி ஆகியோரின் அசத்தலான நடிப்பு படத்திற்கு பலம்.

முத்தமிழ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கேற்ப கொடுத்திருக்கிறார்.

பாபுகுமாரின் ஒளிப்பதிவு படத்தில் அனைத்து காட்சிகளையும் திறம்பட காமிரா கோணங்களில் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

வயது முதிர்ந்தவர்கள் வாழ்வில் நடக்கும் கதையை, கிராமத்து மண்மனம் மாறமல் உண்மைச் சம்பவங்களை தொகுத்து கூறும் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் வைகறை பாலன்.ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று நம்பிக்கையோடு தன்னம்பிக்கையாக செல்லும் பயணம்.இந்த சமூகத்துக்கு முதியவர்களின் பங்களிப்பு எவ்வளவு அவசியம் என்பதை உணர்வுபூர்வமாகவும், மனதை கலங்கடிக்கும் விதமாக எப்படி உணர்த்தினார்கள். இப்படிப்பட்ட முதியவர்களை காப்பாற்ற அமைப்பு ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கும் விதத்தில் தனித்து நிற்கிறார் இயக்குனர் வைகறை பாலன்.பாராட்டுக்கள்.
இளம்வயதினர்கள் பார்த்து பெரியவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய படம் சியான்கள்.