க/பெ ரணசிங்கம் விமர்சனம்

0
616

க/பெ ரணசிங்கம் விமர்சனம்

கே.ஜெ.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோடபாடி ராஜேஷ் தயாரித்திருக்கும் கபெ ரணசிங்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விருமாண்டி.
இதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பூ” ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ,அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார், நமோ நாராயணா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜிப்ரான், சண்டை-பீட்டர் ஹைன், ஒளிப்பதிவு -சுதர்சன் ஸ்ரீPனிவாசன், பாடல்கள்-வைரமுத்து, வசனம்- சண்முகம் முத்துசாமி, நிர்வாக தயாரிப்பு-டி.ஏழுமலையான், மக்கள் தொடர்பு-நிகில்.

இராமநாதபுரத்தில் தண்ணீர் பிரச்சனைக்காக போராடும் விஜய்சேதுபதி சமூக அக்கறையோடு வலம் வருபவர். ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா ராஜேஷ் ஊர் நலனில் அக்கறை காட்டும் கணவர் விஜய் சேதுபதியின் எண்ணத்தை மாற்றி குடும்பத்தை மேம்படுத்த வளைகுடா நாட்டிற்;க்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி எதிர்பாராத துப்பாக்கி சூட்டில் இறந்து விட, அவரின் உடலை வளைகுடா நாட்டிலிருந்து தன் சொந்த ஊருக்கு பல போராட்டங்களை சந்தித்து கிராமத்து பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக எப்படி மீட்டு கொண்டு வருகிறார்?என்பதே மீதிக்கதை.

விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஜஸ்;வர்யா ராஜேஷ் படம் முழுவதும் தனித்துவமான கதாபத்திரத்தில் ஜொலித்து சாதாரண கிராமத்து பெண் தன் கணவரின் உடலை மீட்கும் பொருட்டு எதிர்கொள்ளும் துயரங்களையும், துன்பங்களையும் அச்சு அசலாக பிரதிபலித்திருக்கிறார்.

இவர்களுடன் பூ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ,அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார், நமோ நாராயணா ஆகியோர் கிராமத்து மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளை இயல்பான இசையால் ஜிப்ரான் மெருகேற்றியிருக்கிறார்.

சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கிராமத்தின் மண் வாசனையோடு எழிலையும், போராட்டங்களையும் மக்களின் வலியையும் காட்சிக்கோணங்களில் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

சண்முகம் முத்துசாமியின் நறுக்கென்ற வசனங்கள் படத்திற்கு பலம்.
வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் மக்கள் அங்கே சில காராணங்களால் இறந்து விட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர எத்தனை இடர்பாடுகள், தடங்கல்களை கடந்து வர வேண்டும், எத்தனை நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், அதுவும் சாதாரண மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், சொந்த ஊரில் வழக்குகள் இருந்தால் உடலை எடுத்து வர சிக்கல்கள் என்னென்ன என்பதையும், யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விருமாண்டி.
கபெ.ரணசிங்கம் நடைமுறை உண்மையை உரக்கச் சொல்லும் பெண் சிங்கம்.