கட்டம் சொல்லுது விமர்சனம் : இயக்குனருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று கட்டம் சொல்லது

0
454

கட்டம் சொல்லுது விமர்சனம் : இயக்குனருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று கட்டம் சொல்லது

கண்ணா கணேசன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து கட்டம் சொல்லுது படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.ஏழிலன்.

இதில் தீபா சங்கர், எஸ்.ஜி.எழிலன், திடியன், சின்னத்துரை, சகுந்தலா, ராஜா அய்யப்பன், சபரிஸ்,மணிவாசன், வீரமணி, ராணிஜெயா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, ஒளிப்பதிவு-சபரிஸ், இசை-தமீம் அன்சாரி, கலை-பிரவீன், ஜனார்த்தனன், துணை இயக்குனர்-புதுவை ஆர்.ஆர்.கார்த்திகேயன், இணை தயாரிப்பாளர்கள்-ராஜா அய்யப்பன், புதுவை ஆர்.ஆர்.கார்த்திகேயன், பிஆர்ஒ-ஏய்ம் சதீஷ்.

தீபா சங்கர் தன் மகளுக்கு வரன் அமையாமலேயே திருமண மண்டபம், கச்சேரி, சமையல், பூ அலங்காரம் என்று தேதி சொல்லி அட்வான்ஸ் கொடுத்து விட்டு வருகிறார். குறிப்பிட்ட தேதியில் எப்படியாவது வரன் அமைந்து விடும் என்று நம்பிக்கையில் தன் மகள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரை பார்க்கப் போகிறார். அங்கே தன் நண்பனுக்கு வரன் பார்க்க வரும் திடியனை சந்திக்கிறார். அந்த சமயம் ஜோதிடரை பார்க்க காலதாமதம் ஆகும் என்று சொல்ல திடியன் தன் நண்பர் எழிலனின் கதையை தீபா சங்கரிடம் சொல்கிறார். தீபா சங்கர் அந்த நண்பனை தன் மகளுக்கு முடிக்க எண்ணும் நேரத்தில் நண்பர் எழிலன் காணாமல் போய் விட்டார் என்று சொல்ல, தீபா சங்கர் வெறுப்பாகி திடியனை திட்டிவிட்டு சென்று விடுகிறார். அதன் பின் என்ன நடந்தது? நண்பர் எழிலன் கிடைத்தாரா? தீபா சங்கரின் மகளுக்கு வரன் கிடைத்ததா? திருமணம் முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

தீபா சங்கர் தனக்கே உரித்தான கொஞ்சும் தமிழில் பேசி, யதார்த்தமாக வரன் தேடி அலைவதும், துடியனிடம் வலியச் சென்று பேசி, பின்னர் ஏமாந்து திரும்புவதும் என்று இயல்பான நடிப்பில் மனதில் இடம் பிடிக்கிறார்.

எஸ்.ஜி.எழிலன் கதாநாயகனாக களமிறங்கி என்ஜினியரிங் படித்தும் வேலை கிடைக்காத பட்டதாரியாக, தினம் தினம் அப்பாவிடம் அடிவாங்கி, அம்மாவின் அரவணைப்பில் நண்பர்;;களுடன் அரட்டை என்று ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இருந்தும் வேலை, திருமணம் என்று அடுத்தக்கட்டமாக நகர முடியாமல் தவிக்கும் தவிப்பு, நண்பர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுவதும், அதிசயமாக காதலி கிடைக்க, நிச்சயம் கைகூடும் நேரத்தில் வரும் தடங்கல், அதன் பின் எழிலன் எடுக்கும் முடிவு என்று கதைக்களம் எழிலனைச் சுற்றியே செண்டிமெண்டலோடும் நகைச்சுவையோடும் நகர படத்தில் அவரை வைத்து அனைவரும் செய்யும் அளப்பரைகள் என்று படம் பல தடைகளை தாண்டி ஒடும் தடகள வீரரைப் போல் நகர்ந்து சென்று இலக்கை அடைவதில் துரித வெற்றியும் பெறுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

திடியன் தீபா சங்கருக்கு இணையாக பேசுவதில் வல்லவராக,கவுண்டர் கொடுத்து கொண்டே நண்பரின் கதையை சொல்வதும், நடந்த சம்பவங்களை தடங்கள் இல்லாமல் சொல்லி தீபாவிடமே இறுதியில் அடி வாங்குவதும் என்று கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் மிகையில்லா நடிப்பில் மிளிர்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது..
சின்னத்துரை, சகுந்தலா, ராஜா அய்யப்பன், சபரிஸ்,மணிவாசன், வீரமணி, ராணிஜெய மற்றும் ஏகப்பட்ட புதுமுகங்கள் படத்தில் நிறைந்து மனதில் நிறைவாக பதிகின்றனர். அதிலும் குறிப்பாக சின்னத்துரை, சகுத்தலா தம்பதியர் நடிப்பு அபாரம்.

எடிட்டர்-விஜய் வேலுக்குட்டி, ஒளிப்பதிவு-சபரிஸ், இசை-தமீம் அன்சாரி, கலை-பிரவீன், ஜனார்த்தனன் ஆகியோர் அவரவர் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்து சிறந்த படைப்பை கொடுத்துள்ளனர்.

கதைக்குள் கதையாக பயணிக்கும் திரைக்கதை, ஜோசியத்தை நம்பினால் நல்லதும் செய்யலாம் நினைத்தால் கெட்டதும் செய்யலாம் என்பதை இடித்துரைத்து, அதில் கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து வித்தியாச கலவையாக  காமெடி தூக்கலாக இயக்குனர் பாண்டியராஜனின் ஆண்பாவம் முதலில் எவ்வளவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோ அதே போல் இந்தப் படம் புதுமுக இயக்குனர் எழிலனுக்கு நல்ல பேரையும், புகழையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.  சில படங்கள் சிறிய படமாக இருந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் கட்டம் சொல்லுது நிச்சயமாக பேசப்படும் படமாக அமைய வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இயக்குனருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று கட்டம் சொல்லது.