‘ஒரு சிலர் தங்கியிருக்கும் போது மற்றவர்கள் வெளியேறவேண்டியிருப்பது ஏன்?’ என்ற உலகளாவிய கேள்வியை ‘எனி டே நௌ’ என்பதன் மூலம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்: ஆன்ட்டி ராவ்தவா

0
171

‘ஒரு சிலர் தங்கியிருக்கும் போது மற்றவர்கள் வெளியேறவேண்டியிருப்பது ஏன்?’ என்ற உலகளாவிய கேள்வியை ‘எனி டே நௌ’ என்பதன் மூலம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்: ஆன்ட்டி ராவ்தவா, 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேசப் போட்டித் திரைப்படக் கதாசிரியர்

நாம் ஊடகங்களில் பார்ப்பதுபோல் “அகதிகள்” என்று முத்திரை குத்தப்பட்ட அவர்களை அவர்களின் எண்ணிக்கையால் அல்லாமல் அந்த நபரை மனிதரை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனி டைம் நவ். ஏன் சிலர் தங்கியிருக்கிறார்கள் மற்றவர்கள் வெளியேற வேண்டியுள்ளது என்ற உலகளாவிய கேள்வியை அது முன்வைக்கிறது. 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவு திரைப்படமான எனி டைம் நவ் கதாசிரியரால் கூறப்பட்ட வார்த்தைகள் இவை. அகதி என்பது ஓர் அடையாளம் அல்ல என்ற செய்தியை திரைப்படம் முழுவதும் வெளிப்படுத்துவதற்கு இந்தக் கதாசிரியர் முழுமையாக முயற்சி செய்திருக்கிறார்.

கோவாவில் நடைபெறும் 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கிடையே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இந்தத் திரைப்படம் விழாவின் சர்வதேச போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது.

ஹாமி ரமீசானால் இயக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தஞ்சத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடன் பின்லாந்து அகதிகள் மையத்தில் வசிக்கும் ராமின் மெஹ்திபோர் என்ற 13 வயது சிறுவனின், அவனது ஈரானிய குடும்பத்தின் கதையைச் சொல்கிறது.

இந்த திரைப்படத் தயாரிப்பின் ஒருபகுதியாக தாம் எவ்வாறு வரம் வர நேர்ந்தது என்பது பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்ட ரௌத்தாவா, ” 9 வயது இருக்கும்போது அவரும் அவரது குடும்பத்தினரும் ரானிலிருந்து ஃபின்லாந்துக்குக் குடிபெயர்ந்து சென்றதையும் இந்தத் திரைப்படம் அதற்கு மிகவும் நெருக்கமாக அவரது வாழ்க்கையைக் கூறுவதாகவும் இருக்கிறது” என்றார்.