இலெமூரியா திரைப்பட துவக்க விழா

0
128

இலெமூரியா திரைப்பட துவக்க விழா

இலெமூரியா திரைப்படத்தின் துவக்க விழா திருச்செந்தூர் அருகே உள்ள உவரியில் ஸ்ரீ சுயம்புலிங்கம் திருத்தலத்தில் (முதல் தமிழ் சங்கம் ) 27.10.21 அன்று காலை 9 மணிக்கு பூஜையுடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் (தமிழ்நாடு தொழில் நூட்பத்துறை), மாண்புமிகு நீதியரசர் டாக்டர் பி.ஜோதிமணி (தலைமை கண்காணிப்பு குழு ஆணையம் , தமிழ்நாடு) சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் டாக்டர் த.இரவீந்திரா (இலெமூரியா உலகத்தமிழ் ஆய்வு மையம்) தலைமை தாங்கினார் . ஜோதிடர் நெல்லை வசந்தன், சர்வதேச விளையாட்டு வீரர் சமூக சிந்தனையாளர் டாக்டர் .மா ரா .சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது. தமிழர்கள் உள்ள 186
நாடுகளிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.