இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய பட அறிவிப்பு

0
196

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய பட அறிவிப்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது.

‘புரியாத புதிர்’, ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘மைக்கேல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்

இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார். இந்த நிறுவனம் தற்போது இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் முதன் முறையாக ‘மைக்கேல்’ படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Cast: Sundeep Kishan, Vijay Sethupathi

Technical Crew:
Director: Ranjit Jeyakodi
Producers: Bharath Chowdary and Puskur Ram Mohan Rao
Presenter: Narayan Das K Narang
Banners: Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP
PRO: Yuvraaj

ALSO READ:

Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Titled Michael