இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

0
155

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

இன்றைய பெண்களுக்கான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் வீடியோ பாடலான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்காக இணைந்துள்ள யூடியூபர் நக்ஷா சரண் & சாண்டி

இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி ‘மாஸ்டர்’ உடன் இணைந்து ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ எனும் இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார்.

‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ மகளிர் சக்தியின் வண்ணமயமான கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைந்த பிறகு வேர்களை மறந்துவிடக்கூடாது, தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கவனித்துக்கொள்வது அவசியம், கல்வி மற்றும் தொழில் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் போன்ற அவசியமான செய்திகளை பெண்களிடையே கொண்டு சேர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடிகையாக விரைவில் தனது திரைப்படப் பயணத்தை தொடங்கவுள்ள நக்ஷா சரண், சாண்டியின் நடன இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலுக்காக அவருடன் இணைந்து நடனமாடி இருப்பதோடு, பாடலைப் பாடியும் உள்ளார். ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ வரிகளை எழுதியுள்ள பிரபல கன்னட இசையமைப்பாளர் லியோ இப்பாடலின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழில் தடம் பதிக்கிறார்.

பெரிய பட்ஜெட் படங்களைப் போன்று அதிக பொருட்சலவில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்கு ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் கலை இயக்கத்தையும், ஸ்ரீதேவி ஆடை வடிவமைப்பையும், யாமினி சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையையும் கையாண்டுள்ளனர். மாதவன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோவை முதலியார் பிரதர்ஸ் பிலிம் தயாரித்துள்ளது.

கவர்ந்திருக்கும் மற்றும் கருத்தாழமிக்க வரிகள், உற்சாகமிக்க இசை மற்றும் விறுவிறுப்பான நடன அசைவுகளுடன் கூடிய ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ பாடலின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடிப்பதை ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற இசை மேதை ஏ ஆர் ரஹ்மானின் இசைப் பள்ளியின் முன்னாள் மாணவியான நக்ஷா சரண் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

தொழில் நுட்ப குழுவினர்:

இயக்கம் – கார்த்திக்
ஒளிப்பதிவு – ஹரீஷ் கண்ணன்
கிரியேட்டிவ் டைரக்டர் & நடன அமைப்பு – சாண்டி
இசை & பாடல் – லியோ
படத்தொகுப்பு – ஜிஞ்சி மாதவன்
டிஐ – அருண் சங்கமேஸ்வர்
கலை இயக்கம் – தினேஷ்
பாடகர் – நக்‌ஷா சரண்
உடை வடிவமைப்பு – ஶ்ரீதேவி கோபாலகிருஷ்ணன்
சிகை & மேக்கப் – யாமினி
தயாரிப்பு – Mudaliar Brother’s Film

பிப்ரவரி 23-ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோனி மியூசிக் மூலம் வெளியிடப்பட்ட பிரமாண்டமான நிகழ்ச்சி பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் , தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது…

எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புராஜக்ட்களை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல படைப்புகளை தயாரிப்போம், ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் கார்த்திக் பேசியதாவது…

இப்பாடல் முழுக்க முழுக்க சாண்டி மாஸ்டர் ஐடியா தான் அவர் ஐடியாவை தான் நான் எடுத்தேன் அவ்வளவு தான், உங்களுக்கு பாடல் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் லியோ பேசியதாவது…

இந்த குழு என்னை அழைத்த போது, இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு எல்லோரும் பாடும்படியாக, எல்லோருக்கும் பிடிக்கும் படியான டியூனாக இந்த பாடல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சாண்டி மாஸ்டர், M3 Mudaliyar Brother’s Film ஆகியோரால் இப்பாடல் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. நக்‌ஷா இப்பாடல் மூலம் ராக்ஸ்டாராக மாறியுள்ளார். இன்னும் பெரிய அளவுக்கு செல்வார் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

சாண்டி மாஸ்டர் பேசியதாவது…

இங்கு வந்து வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. ஆல்பம் பாடல் விழாவில், உண்மையில் டான்ஸ் மாஸ்டரை யாரும் விருந்தினராக அழைக்க மாட்டார்கள், ஆனால் என்னை இங்கு அழைத்துள்ள மது ஷாலினி மேடமுக்கு நன்றி. நக்‌ஷாவுக்கு சுத்தமாக டான்ஸ் வரவில்லை, உண்மைதான். ஆனால் அவர் பேஸிக்கிலிருந்து ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டு, இந்த அளவு ஆடியிருக்கிறார். முதலில் பாடல் பாடிய வாய்ஸ் யாருடையது என்பது எனக்கு தெரியாது ஆனால் நக்‌ஷா வாய்ஸ் தான் என தெரிந்து ஆச்சர்யப்பட்டேன். நக்‌ஷா கண்டிப்பாக பெரிய அளவு வெற்றி பெறுவார். இந்த பாடல் உங்களுக்கு பிடித்துள்ளது என நம்புகிறேன் நன்றி.

டாக்டர் கமலா செல்வராஜ் பேசியதாவது…

மது ஷாலினி அழைத்து தான் வந்தேன், அவர் குடும்ப நண்பர் இந்தபாடல் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நக்‌ஷா அவரது பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தந்துள்ளார். அவர் மேலும் பல உயரங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள் நன்றி.

நடிகை கிருத்திகா உதயநிதி பேசியதாவது…

நான் ஏற்கனவே இரண்டு ஆல்பம் பாடல் செய்துள்ளேன் எனக்கு அதில் உள்ள கஷ்டங்கள் தெரியும், இந்த பாடல் மிக துள்ளலாக இருந்தது. இயக்குநர் நன்றாக இயக்கியுள்ளார். சாண்டியின் முந்தைய போதை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது..

குடும்ப நண்பராக தான் நான் வந்துள்ளேன். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எல்லோரும் மிக நன்றாக செய்துள்ளார்கள். அனைவரும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

பாடகர், நடிகை நக்‌ஷா பேசியதாவது…

என் பெற்றோருக்கு தான் முதலில் நன்றி சொல்லி ஆரம்பிக்க வேண்டும் என் கனவை அவர்கள் நனவாக்கியுள்ளார்கள். இப்பாடலை வெளியிடுவதற்காக மியூசிக் சோனி நிறுவனத்திற்கு நன்றி. சாண்டி மாஸ்டர் நிறைய சொல்லி தந்தார், அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி. கார்த்திக் மிக அழகாக இப்பாடலை எடுத்துள்ளார். இங்கு வந்து என்னை வாழ்த்தி ஆதரவு தந்த கிருத்திகா உதயநிதி மேடம், அரவிந்த் சாமி சார், கமலா மேடமுக்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இப்பாடல் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.