ஆஸ்கர் விருது பெற்ற ‘நாட்டு நாட்டுப்’ பாடலின் குழுவினர்  மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் மொத்தக் குழுவிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

0
155

ஆஸ்கர் விருது பெற்ற ‘நாட்டு நாட்டுப்’ பாடலின் குழுவினர்  மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் மொத்தக் குழுவிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சிறந்தப் பாடலுக்கான ஆஸ்கர் விருதுப் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டுப் பாடலின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றம் குழுவினர் அனைவருக்கும் மற்றும் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றதற்காக, ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ், படத் தயாரிப்பாளர் குணீத் மோங்கா மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் மொத்தக் குழுவிற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகாடமியின் ட்விட்டர் பதிவிற்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“அபூர்வமானது!

உலக அளவில் நாட்டு நாட்டுப் பாடல் பிரபலமடைந்தது.  இந்த பாடல் பல வருடங்களுக்கு நினைவில் நீங்காமலிருக்கும். எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் போஸ் மற்றும் குழுவினருக்கு இப்பெருமை மிக்க தருணத்திற்காக வாழ்த்துகள் ”

இந்தியா மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறது #Oscars”

சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றதற்காக, ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ், படத் தயாரிப்பாளர் குணீத் மோங்கா மற்றும் ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் மொத்தக் குழுவிற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அகாடமியின் ட்விட்டருக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“இந்த கௌரவத்திற்காக @EarthSpectrum, @guneetm மற்றும் ‘The Elephant Whisperers’ முழு குழுவிற்கும் வாழ்த்துகள், நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை அவர்களது பணி அற்புதமாக எடுத்துக்காட்டுகிறது. #Oscars ”

இந்தியா மகிழ்ச்சியுடன் பெருமையடைகிறது #Oscars”