ஆன்டி இண்டியன் படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க: தயாரிப்பாளர் ஆதம் பாவா வேதனை

0
218

ஆன்டி இண்டியன் படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க: தயாரிப்பாளர் ஆதம் பாவா வேதனை

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து அற்புதமான கானா பாடல்களை பாடவைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, “மாறன் ஒரு மனோ தத்துவ நிபுணர் மாதிரி. படம் ரிலீசானதுமே பாக்கணும் அப்படிங்கிற ஆர்வத்தால நமக்கு ஏற்படுற மன உளைச்சல் அவரோட விமர்சனங்களை பார்த்ததும் அப்படியே குறைஞ்சிரும்.

இந்தப்படத்துக்கு மாறன் தான் இசையமைச்சிருக்காரு.. அதுபத்தி அவரு தன்னடக்கமா தான் பேசினாரு.. ஆனா படத்துக்கு என்ன தேவையோ அதை சரியா பண்ணிருக்காரு.. இந்தப்படம் வெளியானதும் நிறைய படங்களுக்கு அவரை இசையமைக்க கேட்டு வந்தாலும் அதுல ஆச்சர்யப்பட தேவையில்லை. வடிவேலுக்கு அப்புறமா யதார்த்தமா நடிக்கிற காமெடி நடிகர் இல்லாத சூழல் இருக்கு.. ஆனா இந்த விஜய் டிவி பாலா நிச்சயம் காமெடில ஒரு பெரிய ஆளா வருவாரு.. ஷூட்டிங்ஸ்பாட்டுல இவரோட நடிப்பை பார்த்து அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க.. ராதாரவி மாதிரி சீனியர் நடிகர்கள் சொல்கிற கரெக்சன்களை ஏத்துக்கிறதுல தப்பே இல்ல. அவரை மாதிரியான அனுபவசாலி நடிகர்களை நாம தொடர்ந்து பயன்படுத்திக்கணும்.

இந்தப்படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க.. இந்தப்படத்தால ஏற்கனவே லாபம் கிடைச்சிடுச்சு அப்படின்னு நான் இதுக்கு முன்னாடி நிகழ்ச்சில சொல்லிருந்தேன்.. ஆனா அப்படி ஏதும் நடக்கலை.. ஏன்னா இந்தப்படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு.

இந்தப்படத்தை வெளியிட்டா தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு ஒடிடி நிறுவனங்கள் இந்தப்படத்தை வாங்க தயங்குனாங்க.. தமிழர்களுக்கு எதிரான பேமிலிமேன்-2 மாதிரியான படங்களை ரிலீஸ் பண்றாங்க.. ஆனா தமிழர்களுக்கான படத்தை ரிலீஸ் பண்ண மறுக்கிறாங்க.. அதனால ஒரு பக்கம் தியேட்டர்கள்ல நாங்களே சொந்தமா ரிலீஸ் பண்றோம்.. இன்னொரு பக்கம் வெளிநாடுகள்ல காண்ட்ரலி அப்படிங்கிற நிறுவனம் மூலம் தியேட்டர் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு கேபிள் மூலமா இந்தப்படத்தை வெளியிட ஒப்பந்தம் பண்ணிருக்கோம்.. இதனால வியாபாரத்துல பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு புது முயற்சி எடுத்துருக்கோம்னு சொல்லலாம்” என்று பேசினார்..