அன்பிற்கினியாள் விமர்சனம்

0
428

அன்பிற்கினியாள் விமர்சனம்

ஏ அண்ட் பி க்ருப்ஸ் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்திருக்கும் அன்பிற்கினியாள் படத்தை சக்தி பிலிம் பாக்டரி சார்பில் சக்திவேல் வெளியிட இயக்கியிருக்கிறார் கோகுல்.

இதில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், ப்ரீவின் ராஜா, கோகுல், ரவீந்திரவிஜய், தீபக் ராஜ், பூபதி ராஜா,ஜெயராஜ், அடிநாட் சசி, சங்கர் ரத்னம், கௌரி, த்ரியா பாண்டியன், மோனிஷா முரளி, சந்தோஷ், மணிபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்-மகேஷ் முத்துசாமி, இசை-ஜாவித் ரியாஸ், எடிட்டர்- பிரதீப் ஈ.ராகவ், கலை-எஸ்.ஜெயசந்திரன், வசனம்-கோகுல்,ஜான்மகேந்திரன், பாடல்கள்-லலித்ஆனந்த், நடனம்-பூபதி ராஜா, சண்டை-பிசி, ஆடை-ப்ரீத்தி நெடுமாறன்,இணை இயக்குனர்கள்-மணிபாஸ்கர், பழனி பாலன், சுரேஷ்குரு, பிஆர்ஒ-யுவராஜ்.

அன்பிற்கினியாள் என்கிற கீர்த்தி பாண்டியன் தன் தந்தை அருண்பாண்டியன் மீது அளவில்லா அன்போடு இருக்கிறார். செவிலியர் படிப்பு முடித்திருக்கும் கீர்த்தி கனடா சென்று சம்பாதித்து தன் தந்தையின் கடனை அடைத்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.அதற்காக முயற்சிகள் செய்ய தந்தைக்கோ இதில் துளியும் விருப்பமில்லாமல் இருக்கிறார். இதற்கிடையே பகுதி நேரமாக மாலில் சிக்கன் ஹப்பில் வேலை செய்கிறார். தந்தைக்கு தெரியாமல் ப்ரீவின் ராஜாவை காதலிக்கிறார். இந்த காதல் போலீஸ் மூலமாக தந்தை அருண்பாண்டியனுக்கு தெரியவர காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகள் கனடா செல்ல அனுமதியும் கொடுக்கிறார். இந்த சமயத்தில் ஹைதராபத்தில் ப்ரீவின் ராஜாவிற்கு வேலை கிடைக்க அவர் ஊருக்கு கிளம்புகிறார். அன்று கீர்த்தி பாண்டியன் மாலில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் போது எதிர்பாராமல் அங்கிருக்கும் உணவு பொருட்களை பாதுகாக்கும் உரைய வைக்கும் குளிர் சாதனப் அறையில் மாட்டிக்கொள்ள, கிச்சன் ஹப்பின் மேலாளர் கீர்த்தி இருப்பது தெரியாமல் கடையை பூட்டி விட்டு சென்று விடுகிறார். தந்தையோ மகள் காதலனோடு ஒடி விட்டார் என்று நினைத்து  போலீசில் காதலன் மீது புகார் கொடுக்கிறார். இறுதியில் கீர்த்தியை தந்தை, காதலன், போலீஸ் ஆகிய மூன்று பேரும் தேடி கண்டுபிடித்தார்களா? அதுவரை கீர்த்தி அந்த குளிர் சாதன அறையில் தாக்கு பிடித்தாரா? கீர்த்தியை உயிரோடு மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

பதினாறு வருடங்களுக்கு பிறகு தந்தையாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அருண்பாண்டியன் அவருக்கு மகளாக கீர்த்தி பாண்டியன் இருவரும் சேர்ந்து மிகையில்லா நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் கீர்த்தி இரண்டாம் பாதியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் இடங்களில் அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்று முடிந்தவரை சிரமப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்து சவாலோடு நடித்திருப்பது பாராட்டுக்குரியது.

காதலனாக ப்ரீவின் ராஜா, கைதியாக இயக்குனர் கோகுல், ரவீந்திரவிஜய், தீபக் ராஜ், பூபதி ராஜா,ஜெயராஜ், அடிநாட் சசி, சங்கர் ரத்னம், கௌரி, த்ரியா பாண்டியன், மோனிஷா முரளி, சந்தோஷ், மணிபாரதி மற்றும் அதில் நடித்த அத்தனை பேரும் ஒவ்வொரு காட்சிக்கும் சம்பவங்களுக்கும் உறுதுணையாக இருந்து கச்சிதமாக படத்தை நகர்த்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர்-மகேஷ் முத்துசாமி, இசை-ஜாவித் ரியாஸ் ஆகியோர் படத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து த்ரில்லாக கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தியுள்ளனர்.
எடிட்டர்- பிரதீப் ஈ.ராகவ் முதல் பாதியில் சில காட்சிகள் கவனம் செலுத்தி எடிட் செய்திருந்தால்  இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். நச்சென்ற வசனத்தில் கோகுல்,ஜான்மகேந்திரன் இருவரும் பளிச்சிடுகிறார்கள்.

இயக்கம்-கோகுல்.மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ஹெலன் படத்தை மதுக்குட்டி சேவியர் இயக்கினார். அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதன் அடிப்படை கதை மாறாமல் தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் கோகுல். பாசம், காதல், போலீஸ் கெடுபிடி, விசாரணை, செண்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்து பாசிடிவ் வைப்ரேஷனோடு பாத்திரப்படைப்புகளை கொடுத்து திகில் பாதையில் சென்று வெற்றி திசையில் பயணிக்கிறார் இயக்குனர் கோகுல்.

மொத்தத்தில் அன்பிற்கினியாள் அனைவரின் வெற்றி பூரிப்போடு மனதை கவர்கிறாள்.