ஹைதராபாத்தில் நிறைவடைந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு: சென்னை திரும்புகிறார் ரஜினி?

0
222

ஹைதராபாத்தில் நிறைவடைந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு: சென்னை திரும்புகிறார் ரஜினி?

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு முக்கிய காட்சிகளை இயக்குநர் படமாக்கியுள்ளார். இந்தநிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த சிவா திட்டமிட்டுள்ளார் என கூறப்படும் நிலையில் அத்துடன் அண்ணாத்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது