ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களுக்காகவே பிரத்யேகமான தயாரிப்பு நிறுவனமாக ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ தொடங்கப்பட்டுள்ளது!

0
48

ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களுக்காகவே பிரத்யேகமான தயாரிப்பு நிறுவனமாக ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்தொடங்கப்பட்டுள்ளது!

YNOT ஸ்டுடியோஸின் CEO & தயாரிப்பாளரான சக்ரவர்த்தி ராமச்சந்திரா, ஹாரர்-த்ரில்லர் வகை திரைப்படங்களை மட்டுமே தயாரிப்பதற்காகவே பிரத்யேக தயாரிப்பு நிறுவனமான நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸை தொடங்கியுள்ளார்.

ராமச்சந்திரா 2016-ஆம் ஆண்டு YNOT ஸ்டுடியோவில் இணைவதற்கு முன்பு வரை பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு சுயாதீன தயாரிப்பாளராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. YNOT ஸ்டுடியோஸின் நிறுவனரும், தயாரிப்பாளருமான S. சஷிகாந்த், ராமச்சந்திராவுடன் ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ -ல் பங்குதாரராக தற்போது இணைந்திருக்கிறார். கடந்த 7 வருடங்களாக சஷிகாந்த் மற்றும் ராமச்சந்திரா இருவரும் இணைந்து பெரும் வெற்றிப் படங்களை தயாரித்துள்ளனர்.

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளரான சக்ரவர்த்தி ராமச்சந்திரா பகிர்ந்ததாவது –  “ஹாரர் வகை படங்கள் மீது எனக்கு தீராத ஆர்வம் உள்ளது. பல சிறந்த கதைகள் கொண்ட படங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’ தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திறமையான திரைப்பட இயக்குநர்களுடன் உலகளாவிய அனுபவம் கொடுக்கும் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற எனது உண்மையான முயற்சியின் தொடக்கம்தான் இது” என்றார்.

தயாரிப்பாளர் S.சஷிகாந்த் பேசுகையில், “‘நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்’-க்காக  என் அருமை நண்பர் ராமுடன் இணைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் ! உள்நாட்டு ஹாரர்-த்ரில்லர் படங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல இது ஒரு அற்புதமான வாய்ப்பு. YNOT ஸ்டுடியோஸ் எப்போதுமே புது வகையான முயற்சிகளுக்கு வழி கொடுத்து வருகிறது, அதே சித்தாந்தத்தை கைப்பற்றி நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ்-இன் முயற்சிகளும் அமையும்.” என்றார்.