ஸ்ரீ வாரி ஃபில்ம்ஸ், P.ரங்கநாதனின் அடுத்த தயாரிப்பு சேரன் – கெளதம் கார்த்திக் இணைந்து  நடிக்கும் புதிய படம்

0
190

ஸ்ரீ வாரி ஃபில்ம்ஸ், P.ரங்கநாதனின் அடுத்த தயாரிப்பு சேரன் – கெளதம் கார்த்திக் இணைந்து  நடிக்கும் புதிய படம்

கடந்த ஆண்டில் வெளியான , யோகிபாபு எமதர்மனாக  நடித்த  தர்மபிரபு  வெற்றிப்படத்தின்  மூலம்  எல்லோரது கவனத்தையும்  ஒட்டு மொத்தமாக ஈர்த்த  ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக   முன்னணி  நடிகர்கள்  பலரையும் வைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள்.

குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும்  இந்த திரைப்படத்தில்  கெளதம் கார்த்திக்குடன்  இயக்குனர் சேரன்  இணைந்து   நடிக்கிறார் . டாக்டர் ராஜசேகர் ஜீவிதாவின் இரண்டாவது மகள்   ஷிவாத்மிக்கா அறிமுக கதாநாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள் .  மற்றும் டேனியல் பாலாஜி , சரவணன் , கிழக்கு சீமையிலே விக்னேஷ் ,  சிங்கம் புலி , ஜோமல்லூரி , கவிஞர் சினேகன் , நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் ,  மௌனிகா,    மைனா , பருத்திவீரன் சுஜாதா ,   ஜானகி , பிரியங்கா  , நக்கலைட்  தனம் என ஏராளமான  நட்சத்திரங்களோடு  ஒரு குடும்ப சித்திரமாக  உருவாகும் இந்த திரைப்படத்தை  நந்தா பெரியசாமி எழுதி இயக்க ,  பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவில் , சிவப்பு மஞ்சள் பச்சை புகழ் சித்துகுமார் இசையமைப்பில் கவிஞர் சினேகன்  பாடல்கள் எழுத , ஸ்ரீ வாரி பிலிம்ஸ் தயாரிப்பில்  P. ரங்கநாதன்  தயாரிக்க வரும் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து  படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.