ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் “கண்ணாமூச்சி” படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராகிறார்.

“கண்ணாமூச்சி” என்ற அந்த படத் தலைப்பை அரசியல் சமூகம் மற்றும் திரை உலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் “மெர்சல்”
இது இந்த நிறுவனம் தயாரித்த 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராமசாமி அடுத்து ” கண்ணாமூச்சி” என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படம் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான். பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். இதுவரை ஏற்று நடிக்காத வேடமேற்று திரைக்கதை அமைத்து தனது முதல் படமாக ” கண்ணாமூச்சி” படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பான ” கண்ணாமூச்சி” தலைப்பை இன்று (18.10.2020 ஞாயிறு) காலையில் அரசியல், சமூகம், மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டு சாதனை படைத்தனர்.

படத் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள் வருமாறு –
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சங்கீதா விஜய், கிருத்திகா உதய்நிதி, ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா, லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சுருதிஹாசன், அக்சராஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா , காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, டைரக்டர் காயத்ரி, ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி, ஆகிய ஐம்பது பேர் தான் அவர்கள் இதுவும் ஒரு சாதனை தான். மக்கள் தொடர்பு விஜயமுரளி, கிளாமர் சத்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here