ஷங்கர் படத்தில் ராம் சரண் சம்பளம் இவ்வளவு கோடியா?

0
187

ஷங்கர் படத்தில் ராம் சரண் சம்பளம் இவ்வளவு கோடியா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ராம்சரண் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகின்றன. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன். தற்போது ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாராகிறது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க கூடாது என்று பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றும் இந்த படத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.

இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் ஜெயராம், அஞ்சலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு புனேயில் நடந்தது. ராம்சரண், கியாரா அத்வானி பங்கேற்று நடித்தனர். அங்கு பாடல் காட்சியையும் படமாக்கினர். இந்தப் படத்தில் நடிக்க சம்பளமாக ராம்சரண், ரூ.100 கோடி வாங்கி இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கில் பிரபாசுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகராக ராம்சரண் உயர்ந்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்திருக்கிறார் ராம் சரண். பான் இந்தியா முறையில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை ராம் சரண் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.