வைரலாகும் ‘4 Sorry’ டிரைலர்! இம் மாதம் 29 வெளியீடு!
சேஃப்டி ட்ரீம் புரொடக்ஷன்ஸ், ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ், கார்த்திக் அசோக் புரொடக்ஷசன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் படம் ‘4 sorry’. இந்தப் படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கியுள்ளர். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது!
வெகுஜன மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் மன்னிப்பு என்னும் வார்த்தையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ள. இந்தப் படம் மக்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்விதத்தில் காட்சிகள் யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘4Sorry’ என்ற ஒரு வார்த்தையை வைத்து நான்கு சிச்சுவேஷனில் விறுவிறுப்பான திரைக்கதையில் இந்தப்படம் தயாராகியுள்ளது.
ஜான் விஜய், காளி வெங்கட், டேனியல், ரித்திகா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்ன சிவராம் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகநாரயணன், கார்த்திக் அசோகன் தயாரித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 29 -ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.