வெளியானது விஜய்யின் பீஸ்ட் வெளியீட்டு தேதி!
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ மூலம் தனது ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.
ஆக்ஷன்-காமெடி என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் அசத்தும் அழகி பூஜா ஹெக்டே ஹீரோயின்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் காதலர் தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. தற்போது வரை இந்தப் பாடல் யூ-ட்யூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து பீஸ்ட் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
தற்போது, படத்தின் சென்சார் சம்பிரதாயங்கள் முடிந்துவிட்டதாகவும், படத்திற்கு CBFC U/A சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் சமீபத்திய தகவல்.