வெளியாகும் அரபிக் குத்து பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியாகவுள்ளதாக ஒரு புகைப்படத்தை இணைத்து படக்குழு அறிவித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Lyric video of THE MUCH AWAITED #ArabicKuthu is releasing Today @ 6 PM!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #Beast #ArabicKuthuFromToday #BeastFirstSingle pic.twitter.com/zpVBuAGwjQ
— Sun Pictures (@sunpictures) February 14, 2022