வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மத லீலை படத்தின் ட்ரைலர்

0
245

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மத லீலை படத்தின் ட்ரைலர்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், படத்திற்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரை லான்ச் நேற்று நடைபெற்றது. இதில் வெங்கட் பிரபு, பிரேம் ஜி, அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பிரேம் ஜி ” இந்த படத்தில் நான் நடிக்கவில்லை… அதனால நான் மியூசிக் பண்ணிருக்கேன்…இந்த படம் நல்லா இருக்கும் கண்டிப்பா பாருங்க…ரொம்ப ஜாலியான படம்.. சிங்கிளா இருக்குறவங்க கண்டிப்பாக பாருங்கள்….தளபதியோட பீஸ்ட் ரிலீஸ் வரைக்கும் நாங்கதான்” என கூறியுள்ளார்.