வெங்கடேஷ் பாபு இயக்கத்தில்  “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player! 

0
212

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில்  “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player ! 

ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமா தொடராக உருவாகியுள்ள “வதம்” இணையதொடர்  12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது.

சென்னை 9 பிப்ரவரி 2021 : சக்தி பாண்டியன் தெளிவும், துணிவும் கொண்ட நேர்மையான IPS அதிகாரி. என்னவாயினும் உரிய நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பவர். ஒரு பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமாவாக  ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில் உருவாகியுள்ள “வதம்” MX Original Series இணயதொடரை  MX Player தனது வாடிக்கையாளர்களுக்காக இவ்வாரம் வழங்குகிறது.

ஷ்ருதி ஹரிஹரன் முன்னணி கதாப்பாத்திரத்தில்,  சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரியாக நடிக்கும் இத்தொடரில், பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து, பிரபல தொழிலதிபர் ஒருவரின் கொலையை விசாரிக்கின்றார். கொலை வழக்கில் வெளியாகும் உண்மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது. ஒரு பெண்ணாக அவரது துறையிலிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் பெரும் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கின்றார். ஆனால் அவரது துணிவும், நேர்மையும் நீதிக்கான போரட்டமும் இணைந்து உண்மையை வெளிக்கொண்டுவருகிறது. 10 பகுதிகள் கொண்ட இந்த தொடரினை Applause Entertainment உடன் இணைந்து Tasa Media நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இத்தொடரினை வெங்கடேஷ் பாபு இயக்கியுள்ளார். இத்தொடர்  12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது.

இயக்குநர் வெங்கடேஷ் பாபு இத்தொடர் குறித்து கூறியதாவது…

மிக அழுத்தமான கதைக்களம் கொண்ட இத்தொடர், துணிவும் நேர்மையும் கொண்ட  ஒரு பெண் காவல் அதிகாரியின் கதையை, ஒரே கட்டமாக பார்க்கும் ஆவலை, பரபரப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும். கொலை குற்ற வழக்கை, விசாரிக்கும் கதைகளை, ரசிக்கும் ரசிகர்களுக்கு இத்தொடர் பெருவிருந்தாக அமையும். இத்தொடரின் கதை இளமையான, பயமற்ற, துணிவு மிகுந்த சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரி, நீதிக்காக சட்டத்தையும் வளைக்கும்  கதையினை கூறுவதாகும். ஷ்ருதி ஹரிஹரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் சக்தி பாண்டியன் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார். மேலும் இத்தொடரில் பங்கு கொண்ட அனைவரும் பரப்பரப்பான தொடராக, இத்தொடர் உருவாக பாடுபட்டுள்ளனர்.

ஷ்ருதி ஹரிஹரன் தனது கதாபாத்திரம் பற்றி கூறியதாவது…..

ஒரு நடிகராக, எப்பொழுதும் எனக்கு சவாலான கதாபாத்திரங்களையே தேர்வு செய்வேன். தனிபட்ட முறையில் எனக்கு சக்தி பாண்டியன் கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. பயமில்லாமல் சரியானவைக்காக போராடும் கதாபாத்திரம் மற்றும் ஒரு தொழிலதிபரின் கொலையை தீர்க்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் கதாபாத்திரம். நடிக்கும் போது, இந்த கதாபாத்திரம் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளையும் உள்ளடக்கி இருந்தது.  படபிடிப்பில் மிகவும் உற்சாகமாகவும், அதே நேரத்தில் மிகவும் கடினமாகவும் இருந்தது. இயக்குனர் வெங்கடேஷ் பாபு அளித்த ஆதரவு,  இந்த கதாபாத்திரத்தை திறம்பட செய்ய உதவியாக இருந்தது. எங்களுடைய கடின உழைப்பிலும், அர்பணிப்பிலும் உருவாகியுள்ள “வதம்” தொடர் பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பையும், மிகுந்த மகிழ்ச்சியையும் தரும் என நம்புகிறேன்.

மேலும் இத்தொடரில் அஷ்வதி வாரியர், செம்மலூர் அன்னம், ப்ரீத்திஷா ப்ரேம்குமரன் , விவேக் ராஜகோபால்  ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்தொடரின் 10 பகுதிகளும் முழுக்கவே இலவசாமாக 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் ப்ரத்யேகமாக ஒளிப்பரப்பாகிறது.

ட் ரெய்லரை இங்கு காணலாம்:

Download the App Now

Web: https://www.mxplayer.in/