வீராபுரம் 220 விமர்சனம்
நண்பர்கள் நால்வருடன் அங்காடித்தெரு மகேஷ் அரட்டை, ஆர்ப்பாட்டமாக ஒற்றுமையாக வலம் வருகின்றார்.இதில் ஒரு நண்பரின் திருமணம் நண்பர்களின் செய்கையால் நின்று விட, அதனால் அந்த நண்பர் இவர்களை விட்டு பிரிந்து மற்றவர்களை தொழிலில் பழி வாங்க துடிக்கிறார். அதன் பிறகு மகேஷின் தந்தை, நண்பர் என்று அடுத்தடுத்து இறக்க, அதற்கு காரணத்தை கண்டு பிடிக்கிறாரா மகேஷ்? உண்மையில் நடந்தது என்ன? என்பதே படத்தின் இறுதி முடிவு.
அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ், ஜெயக்குமார் மற்றும் நண்பகளாக நடித்திருக்கும் பலர் படத்தில் முக்கிய காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ரித்தேஷ்; இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் படத்தில் தேவையானவற்றை பூர்த்தி செய்துள்ளனர்.
கணேஷின் படத்தொகுப்பு பார்க்கும்படி உள்ளது.
மணல் மாஃபியா பற்றிய கதையில் கொஞ்சம் காதல், நட்பு, பாசம், பகை, சூழ்ச்சி, விபத்து கலந்து திறம்பட பட்ஜெட் கேற்றவாறு இயக்கியுள்ளார் இயக்குனர் செந்தில்குமார். இறுதியில் பத்து நிமிடங்கள் தான் கதையின் சாரம்சம்சத்தை சொல்லியிருக்கிறார் அதுவரை படம் எதிர்பார்த்த விறுவிறுப்பை கூட்டவில்லை என்றாலும் முயற்சியை பாராட்டலாம்.
மொத்தத்தில் சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் வீராபுரம் 220 இரவில் நடக்கும் பகல் கொள்ளை.