வீட்டிலிருந்து நடந்தே சென்று ஓட்டு போட்ட விக்ரம் – குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்திய சிவகுமார், சூர்யா, கார்த்தி!

0
266

வீட்டிலிருந்து நடந்தே சென்று ஓட்டு போட்ட விக்ரம் – குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்திய சிவகுமார், சூர்யா, கார்த்தி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திரைப் பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 7 மணி முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

இதில் நடிகர் சூர்யா, கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் ஆகியோர் தி.நகரில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.

இதில் நடிகர் அஜித், பொது மக்களோடு வரிசையில் நின்று வாக்கை செலுத்தினார்.

நடிகர் விஜய், சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், நடிகர் விக்ரம் தன்னுடைய வீட்டில் இருந்து, வாக்குச்சாவடிக்கு நடந்தே வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.