‘விருஷபா’ படத்திலிருந்து வெளியான மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
ரசிகர்கள் மத்தியில், மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்
பர்ஸ்ட் லுக்கில் மோகன்லால் அரச உடையில், கையில் வாளுடன், தீவிரமான பார்வையுடன், மிரட்டலான லுக்கில் தோற்றமளிக்கிறார். மோகன்லாலின் அரச அவதாரம் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லாலின் சமூக வலைதள பக்கங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. . மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு, படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது.
விருஷபா படத்தில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹ்ரா எஸ் கான், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக விருஷபா இருக்கும்.
விருஷபா திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. (ஏவிஎஸ் நிறுவனத்துக்காக) நந்த கிஷோர் இயக்கும் இந்தப் படத்தை அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா மற்றும் ஷ்யாம் சுந்தர் (ஃபர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ்) (கனெக்ட் மீடியா) வருண் மாத்தூர் மற்றும் சவுரப் மிஸ்ரா தயாரித்துள்ளனர்.. தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.