விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம்

0
166

விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை:விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததையடுத்து நடிகர் விஜய் தனது இயக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.