விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
162

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு!

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாபம் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.