விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

0
382

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை, பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான பிரபாஸின் ’முன்னா’ படத்தை தில் ராஜுதான் தயாரித்தார்.

அதோடு, வம்சி இயக்கத்தில் வெளியான ராம் சரண் – அல்லு அர்ஜுனின் ‘யுவடு’ படத்தையும், மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ படத்தையும் தில் ராஜுதான் தயாரித்தார். இந்த நிலையில், வம்சி இயக்கும் விஜய் படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்காக விஜய்க்கு 120 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வம்சி ஏற்கனவே, கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கி இருந்தார்.