விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

0
210

விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? அவரே கொடுத்த க்ளூ!

விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு விரைவில் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் ராஷ்மிகாவை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதையடுத்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’மிக விரைவில்’ என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் ‘தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?’ என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய லவ்” என்று பதிலளித்துள்ளார்.