விஜயகாந்த் சிங்க நடைபோட்டு மக்கள் முன்பு வருவார்: விஜய பிரபாகரன் நம்பிக்கை

0
288

விஜயகாந்த் சிங்க நடைபோட்டு மக்கள் முன்பு வருவார்: விஜய பிரபாகரன் நம்பிக்கை.

விரைவில் விஜயகாந்த் சிங்க நடைபோட்டு கர்ஜனையுடன் மக்கள் முன்பு வருவார். ஓரிரு நாட்களில் அப்பாவும் அம்மாவும் இல்லம் திரும்புவார் என்று விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இருவரது உடல்நிலை குறித்தும் நேற்று முன்தினம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தற்போது தொண்டர்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விஜயகாந்த் ரொம்ப நல்லா இருக்கார். அம்மாவும் ரொம்ப நல்லா இருக்காங்க. கொரோனோ ஆரம்பகட்டத்திலேயே கண்டுபித்ததால் விரைவில் குணப்படுத்த முடிந்தது.எனக்கும் தம்பிக்கும் நெகட்டிவ் தான்.விரைவில் விஜயகாந்த் சிங்க நடைபோட்டு கர்ஜனையுடன் மக்கள் முன்பு வருவார். ஓரிரு நாட்களில் இருவரும் இல்லம் திரும்புவார்.

View this post on Instagram

#Captainvijayakanth#premalathavijayakanth#Dmdk

A post shared by VIJAYA PRABHAKARAN (@vijayaprabhakaran_) on