விக்ரம் வேதா ரீமேக் படப்பிடிப்பு – படக்குழு அறிவிப்பு

0
143

விக்ரம் வேதா ரீமேக் படப்பிடிப்பு – படக்குழு அறிவிப்பு

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

நீண்ட மாதங்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை முடிந்து, மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.