விக்ரம் படத்தில் கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியுடன் இணையும் நரேன்

0
188

விக்ரம் படத்தில் கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியுடன் இணையும் நரேன்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களில் வசூலைக் குவித்தது. இப்படத்தில், பொறுப்பான காவல்துறை அதிகாரியாக யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தார் நடிகர் நரேன். மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நரேன் எப்போது இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், நரேன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்தப் பேட்டியில்,”விக்ரம் டீசர் வெளியானபோது நான் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்தேன். அப்போது, கமல் சாரின் ‘விக்ரம்’ படத்தில் எனக்கு ஒரு முக்கிய ரோல் இருப்பதாக கூறினார்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார், நரேன்.