விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு நிறைவடைந்தது – நெகிழ்ச்சியில் இயக்குநர்

0
76

விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு நிறைவடைந்தது – நெகிழ்ச்சியில் இயக்குநர்

விக்ரமின் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார்.

’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குநர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது.

இந்த நிலையில், ’கோப்ரா’ படத்தின் மூன்று ஆண்டுகால படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் அறிவித்து விக்ரம் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.