வலிமை விமர்சனம்: வலிமை அஜித் ரசிகர்களை வெகுவாகக் கவரும்

0
172

வலிமை விமர்சனம்: வலிமை அஜித் ரசிகர்களை வெகுவாகக் கவரும்

பேவியூ புராஜக்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில் அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, ஜி.எம்.சுந்தர், செல்வா, அச்சுத குமார், பாவல் நவகீதன், ராஜ் ஐயப்பா, புகழ் ஆகியோர் நடித்து வலிமை திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எச்.வினோத்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசை-ஜிப்ரான்;, ஒளிப்பதிவு-நீரவ் ஷா, சண்டை-தினேஷ் சுப்பராயன், எடிட்டிங்-விஜய் வேலுக்குட்டி, பாடல்கள்-விக்னேஷ் சிவன், தாமரை, பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா.

புதுச்சேரிக்கு கொலம்பியாவிலிருந்து போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக கப்பல் மூலம் வந்தடைகிறது. அங்கிருந்து தரை மார்க்கமாக சாட்டர்ன் ஸ்லேவ்ஸ் நெட்வொர்க் தலைவன் வில்லன் கார்த்திகேயாவிடம் வந்து சேர, அதை டார்க் வெப் மூலம் இளைஞர்;களை வைத்து பைக்கில் சப்ளை செய்கிறான். இதற்காக ஒவ்வொரு முறையும் ஏஎல்எக்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் பைக்குகளை வாங்கி இளைஞர்களை வைத்து போதைப்பொருட்களை சப்ளை செய்துவிட்டு, செயின் பறிப்பு, கூலிக்காக கொலை என்று பல குற்றங்களை செய்து விட்டு அந்த பைக்குகளை கல்குவாரியில் உள்ள ஏரியில் தள்ளி விட்டு போலீசிடம் சிக்காமல் தப்பி வருகின்றனர். இதனால் போலீசிற்கு குற்றவாளிகளை பிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மதுரையில் அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழும் காவல்துறை உயர் அதிகாரி அஜித்.  சென்னையில் பெருகி வரும் இந்த குற்றங்களை தடுக்க உதவி கமிஷனராக அஜித் பொறுப்பேற்க குடும்பத்துடன் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். முதலில் மேன்ஷனில் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு இளைஞரை விசாரிக்க செல்லும் அஜித்திற்கு அவரின் செல்போன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க, அந்த ஆதாரங்களை வைத்தும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தன் தோழி ஹிமா குரேஷியுடன் சேர்ந்து பல தகவல்களை சேகரித்து அந்த நெட்வொர்க் கேங்கை நெருங்குகிறார்.இதற்கு காரணமான வில்லன் கார்த்திகேயாவை கைது செய்து விசாரணை மேற்கொள்கிறார். கார்த்திகேயாவை விசாரிக்கும் போது தான் தன் தம்பி ராஜ் ஐயப்பாவும் இந்த கும்பலில் சேர்ந்து குற்றங்களை செய்திருப்பது அஜித்தை அதிர்ச்சியடைய வைக்கிறது. அஜித் விசாரணைக்காக தம்பியையும், கார்த்திகேயாவையும் அழைத்துச்செல்லும் போது பைக் ரேஸ் இளைஞர்கள் மூலம் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.இதனால் உதவி கமிஷனராக இருக்கும் அஜித் இன்ஸ்பெக்டராக பதிவியிறக்கம் செய்து காஞ்சிபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். தாய் சுமித்ரா மகன் ராஜ் ஐயப்பாவின் கைதை கேள்விப்பட்டு உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதே சமயம் ஒரு டன் மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றி இந்தியா முழுவதும் சப்ளை செய்ய வில்லன் கார்த்திகேயா அவசரமாக ஏற்பாடு செய்கிறான். இதனை அஜித் கேள்விப்பட்டு எப்படி தடுத்தார்? கடத்தப்பட்ட தன் குடும்பத்தை மீட்க்க அர்ஜுன் என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.

அஜீத் ஓப்பனிங் செம மாஸ், அஜித் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் கம்பீரம், மிடுக்கு, அதட்டலான அலர்ட்டான சுறுசுறுப்பான புத்திசாலித்தனமான காவல் உயர் அதிகாரியாக அவருக்கு பிடித்த பைக் ரேஸ் காட்சிகளுடன் மிரட்டலான சண்டை காட்சிகளுடன் படம் முழுவதும் தன் திறமையான நடிப்பால் தாங்கி பிடித்துள்ளார். குடும்ப சென்டிமெண்ட், பஞ்ச் டயலாக், இளைஞர்களுக்கு அட்வைஸ், அதிரடி ஆக்ஷன் என்று பார்த்து பார்த்து தன்னுடைய வெறித்தனமான ரசிகர்களுக்காக அதகளமாக சிறப்பாக கொடுத்துள்ளார்.

சக போலீஸ் அதிகாரியாகவும் தோழியாகவும் ஹிமா குரேஷி, அம்மாவாக குணச்சித்திர நடிப்பில் சுமித்ரா,  வெறித்தனமான பார்வை, நக்கலான சிரிப்பு, கட்டுக்கோப்பான சிக்ஸ் பேக் தோற்றத்துடன்  மிரட்டலான இளம் வில்லன்  கார்த்திகேயா, வில்லன் போலீசாக ஜி.எம்.சுந்தர், காவல் ஆணையராக செல்வா, அண்ணாக அச்சுத குமார், பாவல் நவகீதன், ராஜ் ஐயப்பா, புகழ் மற்றும் பலர் படத்திற்கு பெரிய பலமாக இருந்து பெரும் பங்கு வகித்துள்ளனர்.

முதல் காட்சி முதல் இறுதிக்காட்சி வரை பரபரக்கும் ஹாலிவுட் தரம் வாய்ந்த பைக் ரேஸ் காட்சிகள், அந்தரத்தில் சாகசம் செய்யும் பைக்கர்கள், காவல்துறையின் நவீன் கட்டமைப்பு கொண்ட கட்டடம், தொழில்நுட்ப அரங்கு, போதைப்பொருள் சம்பந்தப்பட்ட காட்சிகள், வில்லனின் நெட்வொர்க் என்று விறுவிறுப்பாக தன் காமிரா கோணங்களினால் படம் பிடித்து அசர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் வேற மாதிரி தாளம் போட வைத்து மற்றும் அம்மா பாடலும் ரசிகர்களை உருக வைக்கும் அளவிற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசையில் மிரள வைத்துள்ளார் ஜிப்ரான்.

படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளுக்கும், பைக் ரேஸ் சண்டை காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கிறது. வெல்டன் தினேஷ் சுப்பராயன்.

பைக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், செயில் பறிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடக்கும் நெட்வொர்க்கை தன் சாதுர்யமான, சாமர்த்தியமான விசாரணையால் கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரி என்ற திரைக்கதையில் சென்டிமெண்ட், ஆக்ஷன், துரோகம் கலந்த கிரைம் திரில்லரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் எச்.வினோத்.

பேவியூ புராஜக்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடித்திருக்கும் வலிமை அஜித் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.