வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் : படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
256

வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் : படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. அஜித்துடன் ஹியூஉமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எடிட்டராக விஜய் வேலுகுட்டி, சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக கே.கதிர், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைபட்டதால் படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தனர். இன்று (ஜூலை 11) திடீரென்று ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்ததுள்ளது படக்குழு.

மேலும், அஜித்துடன் யாரெல்லாம் நடித்துள்ளார்கள், படப்பிடிப்பின் நிலவரம் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘வலிமை’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.