வருத்தப்படாத வாலிபர் சங்கம் – ரஜினி முருகன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

0
158

வருத்தப்படாத வாலிபர் சங்கம் – ரஜினி முருகன் பட நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் பலர் கொரோனா காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் மரணித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்து சில வாரங்களில், நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளுவதற்குள்ளாகவே சில தினங்களுக்கு முன் நடிகர் நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, குட்டி ரமேஷ் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மற்றுமொரு சினிமா பிரபலம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் பொன்ராமிடம் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றி வந்தார். இந்த தகவலையும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பவுன் ராஜின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.