வரிசி விமர்சனம்: இளைஞர்களை தூண்டில் போட்டு இழுத்து எச்சரிக்கை செய்கிறது வரிசி

0
208

வரிசி விமர்சனம்: இளைஞர்களை தூண்டில் போட்டு இழுத்து எச்சரிக்கை செய்கிறது வரிசி

ரெட் பிலிக்ஸ் பிலிம் பாக்டரி சார்பில் சந்திரசேகர் மற்றும் முயற்சி படைப்பகம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வரிசி.

அறிமுக இயக்குநர் கார்த்திக் தாஸ் எழுதி இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். அறிமுக கதாநாயகியாக சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, ஆவிஸ் மனோஜ், ஜெயஸ்ரீ, அனுபமாகுமார், கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-மிதுன் மோகன், இசை-நந்தா, பாடல்கள்-உமாரமணன், நடனம்-ஷெரிஃப், எடிட்டர்-கேடி, கலை-மேட்டூர் சௌந்தர், ஸ்டன்ட்-நைஃப் நரேன், காஸ்டிங் டைரக்டர்-பாலாஜி ராஜாசேகர், இணை இயக்குனர்கள்-ரவிகுமார், வெங்கட் ராம் குமார், தயாரிப்பு நிர்வாகி-எம்.சிவகுமார், புகழேந்தி, பிஆர்ஒ-விஜய்முரளி, கிளாமர் சத்யா.

பள்ளியின் தளாளர் அனுபமா குமார், கூடவே அனாதை காப்பகமும் நடத்துகிறார். அவர்களில் தன் மகன் மனோஜுடன் சேர்த்து கார்த்திக் தாஸ், சப்னா ஆகியோரையும் தன் சொந்த பிள்ளைகள் போல் வளர்கிறார். கார்த்திக் மற்றும் சப்னா சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து நண்பர்களாக இருப்பதால் காதலிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மொபைல் ஆப், ஹாக்கர், ஐடி என்று ஒவ்வொரு துறையில் வல்லுனர்களாக இருப்பதால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிண்ணணுவியல் கண்டிபிடிப்புகளை செய்து அதை பல இடங்களில் பொருத்தி சம்பாதிக்கிறார்கள். இதனிடையே முகப்பேரில் ஐடியில் வேலை செய்யும் பெண் கால் டாக்சி டிரைவரால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க சிபிஐ அதிகாரி நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக ஒய்வு பெற்ற அதிகாரி நியமிக்கப்பட அவரின் மகளே மர்ம நபரால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார். இதனால் விசாரணை துரிதமாக நடைபெறுகிறது. அதற்குள் சிபிஐ அதிகாரி மனைவி கொல்லப்படுகிறார், அதன் பின் சப்னா அந்த கால் டாக்சி டிரைவரால் கடத்தப்;படுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் குற்றவாளியை தேடிச் செல்கின்றனர். இறுதியில் கால் டாக்சி டிரைவர் பிடிபட்டரா? நண்பர்கள் கால் டாக்சி டிரைவரை என்ன செய்தார்கள்? போலீசிடம் ஒப்படைத்தார்களா? இல்லையா? என்பதே க்ளைமேக்ஸ்.

புதுமுக அறிமுக நாயகன் கார்த்திக் தாஸ், புதுமுக நாயகியாக சப்னாதாஸ்கிருஷ்ணா, துஷாரா, ஆவிஸ் மனோஜ், ஜெயஸ்ரீ, அனுபமாகுமார், கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா ஆகியோர் தங்களின் கதாபாத்திரத்திற்கு கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மிதுன் மோகனின் ஒளிப்பதிவு அறிவியல் சார்ந்த மிண்ணணு கண்டுபிடிப்புகளின் காட்சிக்கோணங்களில் வித்தியாசத்தை காட்டி திறம்பட கொடுத்துள்ளார்.
நந்தாவின் இசை மற்றும் பின்னணி இசை படத்தின் இன்றியமையாத காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

எடிட்டர் கேடி இன்னும் பல காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு தோய்வு ஏற்படாமல் இருந்திருக்கும்.

நான்கு நண்பர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்,இன்றைய இளைஞர்கள் இணையத்தை நன்றாகவும் பயன்படுத்தலாம் அதே சமயம் தவறாக பயன்படுத்தி பல பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களும் பாதிக்கப்பட காராணமாயிருக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிய வைத்து, பெண்கள் பாதுகாப்பாகவும். உஷாராகவும் இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கையோடு சொல்லியிருக்கும் விதம் அருமை என்றாலும் இறுதிக் காட்சியில் ஹீரோயின் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஆப் மொபைல் போனில் இருக்க, சட்டென முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் கால் டாக்சி டிரைவரிடம் ஹீரோ பேசும் காட்சிகள், வசனங்கள் இழுவையானவை தேவையில்லாதவை. பல இடங்களில் எடிட் செய்திருந்தால் அழுத்தமான பதிவாக வலம் வந்திருக்கும்.

மொத்தத்தில் ரெட் பிலிக்ஸ் பாக்டரி சார்பில் சந்திரசேகர் மற்றும் முயற்சி படைப்பகம் தயாரிப்பில் வரிசி இன்றைய காலகட்டத்திற்குகேற்ற தொழில்நுட்பத்தில் வித்தியாசத்தை காட்டி இளைஞர்களை தூண்டில் போட்டு இழுத்து எச்சரிக்கை செய்கிறது.