வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

0
129

வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இயக்குர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அண்மையில் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி இருக்கும் அருண் விஜய் இந்த போஸ்டரில் இருந்தார்.

இந்நிலையில், வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது.