லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் துவங்கியது!

0
305

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் துவங்கியது!

நடிகர் சிவாகர்த்திகேயன் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும் “டான்” படத்தின் படப்பிடிப்பு  11 கோயம்புத்தூரில் துவங்கியது. படத்தின் அனைத்து நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் இதில் பங்கு கொண்டனர். இப்படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இபடத்தினை தயாரிக்கிறது.

கல்லூரியை பின்னணி களமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படமாக, இப்படம் உருவாகிறது. நடிகை பிரியங்கா அருள் மோகன் “டாக்டர்” படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இப்படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். நடிகர்கள் SJ சூர்யா, சமுத்திரகனி, விஜய் டீவி புகழ் ஷிவாங்கி, RJ விஜய், முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பல பிரபல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தினை இயக்க இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ உடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றார்.

ALSO READ:

LYCA PRODUCTIONS SUBASKARAN ALLIRAJAH PRESENTS ACTOR SIVAKARTHIKEYAN’S “DON” SHOOTING COMMENCED IN COIMBATORE