ரொமான்ஸ் ஷாருக்கை மீண்டும் தரிசிக்கும் ஆர்வத்தில் உற்சாகமான ரசிகர்கள் ஜவான் படத்திலிருந்து ‘ஹைய்யோடா’ பாடல் நாளை வெளியீடு

0
157

ரொமான்ஸ் ஷாருக்கை மீண்டும் தரிசிக்கும் ஆர்வத்தில் உற்சாகமான ரசிகர்கள் ஜவான் படத்திலிருந்து ‘ஹைய்யோடா’ பாடல் நாளை வெளியீடு

“ஜவான்” படத்தின் தயாரிப்பாளர்கள், நாளை வெளியாகவுள்ள “ஹைய்யோடா” பாடலின் ஸ்னீக் பீக்கை வெளியிட்டு, ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளனர்.

நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், மனதை வருடும் ரொமான்டிக் பாடலான ‘ஹைய்யோடா’ நாளை வெளியாகவுள்ளது. முதன்முறையாக திரையில் ஜோடி சேர்ந்திருக்கும் ஷாருக்கான் நயன்தாரா ஜோடியின் அழகை காண, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நேற்று ஒரு மோஷன் போஸ்டர் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்த ஜவான் தயாரிப்பாளர்கள், இன்று டீஸர் மூலம் ரொமான்டிக் பாடலை அறிமுகப்படுத்தி கொண்டாட்டத்தை தந்துள்ளனர், இந்த டீஸர் பாடல் குறித்த முழுமையான அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரொமான்டிக் டிராக்கில் பங்குபெறும் ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பு, பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும் ! காதல் மன்னன் என போற்றப்படும் ஷாருக், ஒரு முழுமையான காதல் பாடலுடன் மீண்டும் வருவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகிறார்கள். ஹைய்யோடா பாடலை நாளை முதல் கொண்டாடலாம் !

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.