ரிக் கிரியேஷன்ஸ் “ஓட்டம்” : பேய் பங்களாவுக்குள் சிக்கி தவிக்கும் தேன் நிலவு தம்பதிகள்!

0
210

ரிக் கிரியேஷன்ஸ் “ஓட்டம்” : பேய் பங்களாவுக்குள் சிக்கி தவிக்கும் தேன் நிலவு தம்பதிகள்!

ரிக் கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேமாவதி ரவிஷங்கர் தயாரிக்கும் முதல் படம் ’ஓட்டம்’. மர்மங்களும் திகிலும் நிறைந்த இந்த படத்தில் இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் எஸ்.பிரதீப் வர்மா. இவருடன் ஐஸ்வர்யா சிந்தோஹி, அனுஸ்ரேயா கதாநாயகிகளாக அறிமுகமாக, வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் எஸ்.ரவிஷங்கர். இவர்களுடன் சாய்தீனா, அம்பானி சங்கர், நந்தகோபால், நிக்ஸிதா, ரெஜினி போன்றோர் நடித்துள்ளனர்.

ஜோசப் ராய் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை வி.ராம்தேவ் வடிவமைத்துள்ளார். மஞ்சு மற்றும் ஆகாஷ் நடனம் அமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு – விஜய் முரளி.

படட்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் எம்.முருகன். இவர் இயக்குநர் இராம.நாராயணிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பண்புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை மற்றும் டிரையிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க்க தலைவர் ராமசாமி முரளி, சென்னை செங்கை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க்க தலைவர் கே. ராஜன், இயக்குனர் பேரரசு, பட அத்பர் விஜய் முரளி ஆகியோர் கலந்து கொண்டு இசை தட்டை வெளியிட்டு பேசினார்கள்.

படம் பற்றி இயக்குனர் எம். முருகன் பேசுகையில்,“ தேன் நிலவு தம்பதிகள் மலை பிரதேசத்துக்கு சென்று அங்குள்ல ஜமீன் பங்களாவில் தங்குகிறார்கள். அந்த பங்களாவில் இருக்கும் பேயிடம் அவர்கள் சிக்கிக்கொள்ள அவர்கள் எப்படி தப்பி செல்கிறார்கள் என்பதை நகைசுவை கலந்து ஹாரர் படமாக கொடுத்து இருக்கிறேன்”என்றார்.

கதாநாயகிகள் ஐஸ்வர்யா ஸ்ரேயா, அனுசுயா ராஜன், வில்லன் நடிகர் சாய் தீனா,ஒளிப்பதிவாளர் ஜோசப் ராய்,ஆகியோரும் பேசினார்கள்.

முன்னதாக அனைவரையும் நிர்வாக தயரிப்பாளர் ரவிசங்கர் அனைவரையும் வாவேற்றார்.