ராஷ்மிகாவுடன் திருமணமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா

0
72

ராஷ்மிகாவுடன் திருமணமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் திரையுலகில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கில் நடித்த ”டியர் காமரேட்” படம் தமிழிலும் வந்தது. அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த புஷ்பா படத்திலும் கதாநாயகியாக வந்தார்.

ராஷ்மிகாவும், முன்னணி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளிவந்தன. இதனை ராஷ்மிகா மறுத்து இருந்தார். தனக்கு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போதிய வயது இல்லை என்றும், திருமணத்தை பற்றி யோசிக்க நேரம் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொள்ள தயாராகி இருப்பதாகவும், இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு இணையதளங்களில் தீயாக தகவல் பரவியது. திருமண தேதியை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், வழக்கம் போல் கிசுகிசுக்கப்படுகிற செய்தி தான் இது. இந்த செய்தியை நாங்கள் ரசிக்கிறோம் என்று பதிவிட்டிருக்கிறார்.