ராஜமௌலி வழியை பின்பற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

0
163

ராஜமௌலி வழியை பின்பற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து எந்தப் படத்தை இயக்கப் போகிறார், யார் ஹீரோ என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவிவந்த நிலையில், இறுதியாக முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அவரது புதிய படத்தில் நாயகனாக நடிப்பது நடிகர் அல்ல, சிஜியில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என்கிறது உள்வட்ட தகவல்.

முருகதாஸ் சூர்யா, அஜித், விஜய், ரஜினி என்று டாப் நடிகர்களை இயக்கிவிட்டார். தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு. இந்தியில் அமீர்கான். இதற்கு மேல் இந்தியாவில் பெரிய நட்சத்திரங்கள் இல்லை. இப்படியொரு சூழலில் எந்த இயக்குனருக்கும் அடுத்து என்ன என்று தோன்றுவது இயல்பு. அப்படி ராஜமௌலிக்கு தோன்றிய போது அவர் உருவாக்கியதுதான் நான் ஈ திரைப்படம்.

நானி, சமந்தா நடித்த அப்படத்தில் சிஜியில் (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) உருவாக்கப்பட்ட ஈ தான் நாயகன். அது செய்யும் சாகஸங்கள்தான் படம். அந்தப் படத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்தே பாகுபலியை அவரால் எடுக்க முடிந்தது. பாகுபலியில் வரும் சிஜி காட்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தது நான் ஈ படத்தில் கிடைத்த அனுபவமே.

முருகதாஸ் அதேபோல் சிஜியில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதைச்சுற்றி கதை நடப்பது போல் புதிய படத்தை எடுக்க இருக்கிறார். ஈ போன்று சிறிய உயிரியாக இல்லாமல் கிங்காங் போன்று பிரமாண்ட உருவமாக இது இருக்கும் என்கின்றன தகவல்கள்.

இதற்கான ப்ரீபுரொடக்ஷன் பணிகள், முக்கியமாக சிஜியில் உருவாக்கப்படும் அந்த கதாபாத்திரத்தை வடிவமைக்கும் வேலைகள் தற்போது நடந்து வருகின்றனவாம். அக்டோபர் 14 ஆம் தேதி இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரலாம்.