ரம்ஜான் பண்டிகை அன்று ஓடிடியில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வெளியீடு?

0
446

ரம்ஜான் பண்டிகை அன்று ஓடிடியில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வெளியீடு?

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தை, ‘கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘தளபதி 65’ படத்தினையும் நெல்சன் இயக்கி வருவதால் டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்திலிருந்து ‘செல்லம்மா செல்லம்மா’, ‘So Baby’, நெஞ்சமே என மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில்,  ‘டாக்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிடுவதா இல்லை திரையரங்கில் வெளியிடுவதா என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் டாக்டர் படம் ஓடிடியில் வெளியாவதற்கே அதிக பட்ச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அரசு தியேட்டரில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்துதான் படக்குழு இந்த ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

திரைப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று (மே 14) வெளியாகும் எனக் தெரிகிறது.