ரஜினியின் பிறந்த நாளான டிச.12-ல் 4Kயில் ‘தளபதி’ ரீரிலீஸ்!

0
264

ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 4Kயில் ‘தளபதி’ ரீரிலீஸ்!

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான ‘தளபதி’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட உள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த திரைப்படம் ‘தளபதி’. ஷோபனா, அரவிந்த் சாமி, ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இந்தப் படம் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் ‘க்ளாசிக்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகியும் மிகுந்த எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இப்படத்தில் இளையராஜா அவர்களது இசையில் அனைத்து பாடல்களுமே Super Hit குறிப்பாக SPB அவர்களின் குறளில் ராக்கம்மா கைய தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி ஆகிய பாடல்கள் வரலாற்றில் சிறந்த இடத்தை பிடித்தவை.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 12-ம் தேதி “தளபதி” மெகா ஹிட் திரைப்படத்தை Digitalization (4 K) வாக மாற்றம் செய்து SSI Production தமிழ் நாட்டில் 150 மேலான திறையரஙகுகளில் மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது.

இப்படம் திரை உலக வரலாற்றில் ஒரு மைல் கல். அப்படி பட்ட ஒரு படத்தை இன்றைய தலைமுறைகள் கண்டு களிக்க உள்ளனர்.